மை வாட்ச்: போலீஸ் படை ஐஜிபி-இன் கட்டுப்பாட்டில் இல்லை

sriதம் அதிகாரிகள்மீது  ஊழல்  விசாரணை  நடப்பது  பற்றித்  தமக்குத்  தெரியாது  என்று  இன்ஸ்பெக்டர்-ஜெனரல்  அப்  போலீஸ்  காலிட்  அபு  பக்கார்  கூறியிருப்பது  போலீஸ்  படை  அவரது  கட்டுப்பாட்டில்  இல்லை  என்பதைக் காண்பிக்கிறது.

குற்றச்செயல்களை  எதிர்க்கும்  மைவாட்ச்  அமைப்பின்  தலைவர் எஸ். ஸ்ரீசஞ்சீவன்  நேற்று  ஓர்  அறிக்கையில்  இவ்வாறு  கூறினார்.

போலீஸ்  அதிகாரிகளின்  சட்டவிரோத  நடவடிக்கைகளை  மைவாட்ச்  ஏற்கனவே  அம்பலப்படுத்தியுள்ளதாக  ஸ்ரீசஞ்சீவன் தெரிவித்தார்.

மைவாட்ச்  வெளியிட்ட  தகவல்களைக் கவனத்தில்  கொள்வதாக  காலிட்   வெறுமனே கூறினாரே  தவிர,  மேல்நடவடிக்கை  எதுவும்  எடுக்கவில்லை.

போலீஸ்  படையின்  இப்போதைய-முன்னாள்  உயர்  அதிகாரிகளுக்குக்  கால்பந்தாட்ட  பந்தயம்,  கறுப்புப்  பணத்தை  வெள்ளையாக்குதல்  போன்ற  சட்டவிரோத  நடவடிக்கைகளில் தொடர்புள்ளதை  நிரூபிக்கும்  தகவல்கள்  மைவாட்சிடம்  இருப்பதாக  அவர்  சொன்னார்.

காலிட்டின்  சொந்த  ஊரான  மந்தின்  “மிகப் பெரிய  போதைப்பொருள்  விற்பனை  மையம்”,  அதற்கு  அருகில்  உள்ள  சிரம்பானில்  100-க்கு  மேற்பட்ட  சட்டவிரோத  சூதாட்டக்  கிடங்குகள்  செயல்படுகின்றன.

“சொந்த ஊரை,  சொந்த  மாநிலத்தைப்  பத்திரமாக  வைத்துக்கொள்ள  முடியாத  காலிட்  நாட்டைப்  பாதுகாப்பாக  வைத்துக்கொள்வார்  என்ற  நம்பிக்கை  எங்களுக்கு  இல்லை”, என  ஸ்ரீசஞ்சீவன்  குறிப்பிட்டார்.