மலேசியா மலாய்க்காரர்களுக்கே உரியது என்பதை உலகம் அங்கீகரிக்க வேண்டும்

ismaமலேசியா, மலாய்க்காரர்களின்  நாடு  என்பது  உலக  அளவில்  அங்கீகரிக்கப்பட  வேண்டும்  என்று  இஸ்லாமிய  என்ஜிஒ-வான ஈக்காத்தான்  முஸ்லிமின்  மலேசியா(இஸ்மா)  கோரிக்கை  விடுத்துள்ளது. 

“உலகம்  சீனாவைச்  சீனர்களுடையதாக,  இந்தியாவை  இந்தியர்களுடையதாக,  இங்கிலாந்தை  ஆங்கிலேயருடையதாக,  ஜெர்மனியை  ஜெர்மானியருடையதாக  அங்கீகரித்து  ஏற்றுக்கொண்டிருப்பதுபோல்  இது  மலாய்க்காரர்  நாடு”, என இஸ்மா  உதவித்  தலைவர் II அப்துல் ரஹ்மான்  டாலி  இன்று  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

அண்மைய  ஆய்வு,  லெம்பா  பூஜாங்  கெடா  துவா  மலாய்  நாகரிகம்  கி.மு. 2ஆம் நூற்றான்ண்டைச்  சேர்ந்தது என்பதைக்  காண்பிக்கிறது.  இது,  அந்நாகரிகம்  கம்போடியாவின் அங்கோர்  வாட்டையும்  இந்தோனேசியாவின்  பொரோபுதூரையும்விட  பழமையானது  என்பதை   உறுதிப்படுத்துகிறது  என்றாரவர்.

“எனவே,  மலாய்க்காரர்  நிலை  பற்றி  சீனர்களோ,  இந்தியர்களோ  அல்லது  வேறு  எவருமோ  கேள்வி  எழுப்பக்கூடாது.  மொத்த  உலகமும்  மலேசியாவை  மலாய்காரர்களுக்கு  உரியது  என்று  அங்கீகரிக்க  வேண்டும்”,  என  அப்துல்  ரஹ்மான்  கூறினார்.