33 ஆண்டு தயிப் ஆட்சிக்குப் பின்னரும் சரவாக்கில் வறுமை குறையவில்லை

irswardiஅப்துல்  தயிப்  மஹ்மூட் 33  முதலமைச்சராக   இருந்து  ஆண்டுகள்  ஆண்ட  பின்னரும்,  சரவாக்,  வறுமைப் பட்டியலில்  இன்னும் மூன்றாம் இடத்திலேயே  இருப்பது  ஏன்  என்று  சரவாக்  பிகேஆர்  இளைஞர்  பகுதி  கேள்வி  எழுப்பியுள்ளது.

அம்மாநிலத்தில்  நிதிக் கையிருப்பு  ரிம22 மில்லியன் இருந்தும்  இந்நிலை  ஏன்  என  இஸ்வார்டி  முர்னி  வினவினார்.

வறுமைப்  பட்டியலில்  சாபா,  கிளந்தானை  அடுத்து  சரவாக்  மூன்றாவது  இடத்தில்  இருந்தாலும்  அங்கு  வறிய  மக்களின்  எண்ணிக்கை  அதிகம்  என்றாரவர்.

சரவாக்கில்  வறுமை  நிலையில்  உள்ளோர்  எண்ணிக்கை  66,000-க்கும்  அதிகமாகும். கிளந்தானில்  சுமார்  51,000 பேர்தான்  ஏழைகள்.

“சிலாங்கூரில்  கையிருப்பில்  ரிம3 பில்லியன்  இருப்பதைப்  பெருமையாகக்  குறிப்பிடுகிறார்கள். சரவாக்கிடம்  ரிம22 பில்லியன்  இருக்கிறது.  ஆனாலும்,  அதை வைத்து  மக்களுக்கு உதவுவதில்லை”, என இஸ்வார்டி  கூறினார்.