மசீச: காலிட் ஒரு நல்ல எம்பி-ஆக இருப்பார்

mcaதிடீரென்று  சிலாங்கூர்  மந்திரி  புசார்  காலிட் இப்ராகிமின்  புகழ்பாடத்  தொடங்கி  இருக்கிறது  மசீச.  இந்த  வகையிலாவது  காஜாங்  இடைத்  தேர்தலில்  அன்வார்  இப்ராகிமை  எதிர்த்துப்  போட்டியிடும்  தன்  வேட்பாளருக்கு  கூடுதல்  வாக்குகள்  கிடைக்காதா  என்கிற  ஒரு  நப்பாசைதான்.

நேற்று  புத்ரா ஜெயாவும்  சிலாங்கூர்  அரசும் செய்துகொண்ட   நீர்  ஒப்பந்தம்  பற்றிக்  குறிப்பிட்ட  மசீச   துணைத் தலைவர்  வீ  கா  சியோங்,    மக்களின்  நலனுக்காக  அரசியல்  வேறுபாடுகளைப்  புறம்தள்ளிவிட்டு  அந்த  ஒப்பந்தத்தில்  கையொப்பமிட  முன்வந்தார் காலிட்  என்றார்.

இது, காலிட்  மக்களின்  துன்பங்களை  உணர்ந்தவர்  என்பதைக்  காண்பிப்பதாக  அவர்  சொன்னார்.   ஆனால்,  அன்வார் இடைத்  தேர்தலில் வெற்றிபெற்றால்  காலிட்டின்  இடத்தை  எடுத்துக்கொள்வார்.

“ஆக, எவர்  நல்ல  மந்திரி  புசாராக  இருப்பார்  என்பதை  ஊடகங்களும்  வாக்காளர்களும்தான்  முடிவு  செய்ய  வேண்டும்”, என  மசீச  தலைவர்  காஜாங்கில்  செய்தியாளர்  கூட்டமொன்றில்  கூறினார்.