மலேசிய ஊழல்-தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி), ஊழல்களிலும் பணத்தைச் சலவைசெய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்ட 60 போலீஸ் அதிகாரிகள்மீது விசாரணை நடத்துவதாக இணைய செய்தித்தளம் ஒன்றில் வெளிவந்த செய்தியில் உண்மை இல்லை என இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் மறுத்துள்ளார்.
“எம்ஏசிச் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அபு காசிம் முகமட்டைச் சந்தித்துப் பேசினேன். அவரும் அந்தச் செய்தி கேட்டு வியப்படைந்தார். எங்கிருந்துதான் அவர்களுக்கு (மலேசியன் இன்சைடர்) அச்செய்தி கிடைத்ததோ?.
“அது பொய்யான செய்தி என்றவர் தெரிவித்தார்”, என காலிட் கூறினார்.
நாங்கள் நம்பி விட்டோம் ஐயா….
அப்போ அந்த 60,குறறவாலிகள் மீது எந்த நடவடிகையும் கிடையாதா அல்லது அப்படி ஒரு குற்றமே நடக்கவில்லையா.எல்லாம் அவா அறிவா நாராயண நாராயண.