கோலாலும்பூர் உயர் நீதிமன்றம், வான் முகம்மட் அஸ்ரி வான் டெரிஸ்தான் பாபாகோமோ என்பதும் அவர் தீய நோக்குடன் அன்வார் இப்ராகிம்மீது அவதூறு கூறி வந்தார் என்பதும் நிரூபிக்கப்பட்டிருப்பதாக தீர்ப்பளித்தது. .
தீர்ப்பை வழங்கிய நீதித்துறை ஆணையர் ரோலிலா யோப், அவதூறு செய்த வான் முகம்மட் அஸ்ரி ரிம800,000 இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
“செலவுத் தொகையாக ரிம50,000 கொடுக்குமாறும் நீதிமன்றம் வான் முகம்மட் அஸ்ரிக்கு உத்தரவிட்டது”, என அன்வாரின் வழக்குரைஞர் என். சுரேந்திரன் கூறினார்.
தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாக வான் முகம்மட் அஸ்ரி-இன் வழக்குரைஞர் ஜஸ்பீர் சிங் கவுரா கூறினார்.

























