‘மலேசியா, மலாய்க்காரர்களுக்கே சொந்தம் மற்ற இனத்தவர் அது குறித்து கேள்வி எழுப்பக்கூடாது என்று கூறிய இஸ்லாமிய என்ஜிஓ-வான ஈக்காத்தான் முஸ்லிமின் மலேசியா(இஸ்மா)-வை கெராக்கானும் பிகேஆரும் சாடியுள்ளன.
அது இனவாதம் மிக்க ஓர் அறிக்கை என்று சாடிய கெராக்கான் துணைத் தலைவர் சியா சூன் ஹாய், அது இஸ்மாவின் உதவித் தலைவர் அப்துல் ரஹ்மான் டாலியின் மனநிலையையும் பிரதிபலிக்கிறது என்றார்.
“தீவிரவாத தரப்புகள் திருந்த வேண்டும். பொறுப்பற்ற முறையில் சினமூட்டும் செயல்களில் ஈடுபடக்கூடாது”, என்றாரவர்.
இதனிடையே, சிலாங்கூர் பிகேஆர் செயலாளர் அமிருடின் ஷாரி, இஸ்மாவின் அறிக்கை பொறுப்பற்றது என்றும் அது இஸ்லாத்தைப் பற்றித் தப்பான எண்ணத்தை உருவாக்கலாம் என்றும் கூறினார்.
“அது இனங்களுக்கிடையில் புரிந்துணர்வையும் ஒற்றுமையையும் வலுப்படுத்த உதவாது”, என பத்து கேவ்ஸ் சட்டமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.
இது ஒரு கிணற்றுத் தவளையின் ஒப்பாரி.
‘மலாய்க் காரர்களுக்குதான் சொந்தம்’ என்று சொல்லி விட்டு பிறகு ஏன் இந்தோனீசியர்களுக்கும் வங்காளதேசத்தாருக்கும், சூலு காரர்களுக்கும் அடையாள அட்டை கொடுக்கிறார்கள்?
யாறும் எதையும் பேசலாம் தப்பேயில்லை என்ற நிளையில் 1 மலேசியா கொள்கை,யாவறும் யாசிப்பது கட்டுபாடற்ற பேச்சு சுதந்திரம்,எழுத்து சுதந்திரம் அதைதான் அவன் செய்தான்.அவன் செஞ்சா தீவிரவாதம் நீங்கள் செஞ்சா?.கேம் கடைக்கு தன் மனைவியை செக்சியா அழைச்சிட்டு வநதான் சீன முதலாலி,அவன் பாட்னா் மலாய் காரன் கேட்டான்,நீ இங்கே டீ சாப்பிடு நான் போய் உன் மனைவியை வீட்டில் விட்டுட்டு வாரேண்னு சொன்னான்,ஏன் சொன்னான் தெரியுமா இந்த மாதிாி இடத்துக்கு குடும்பத்தை அழைத்துவராதே மாியாதை இல்லை என்பதே.அதுவே இங்கு நடக்குது.கட்சி தலைமை எதை பேசவேண்டும்,தொன்டா் எதை பேசவேண்டும் என்று எல்லை உண்டு,ஏன் நீா் ஒரு அறிக்கை விடும்.எனக்கு ஜால்றா போட தொியாது தோழா.அன்வர் ஒரு மனிதனா,அவனை போய் நம்பி….நாராயண நாராயண.
இனவாதம் மிக்க ஓர் அறிக்கை என்றால் மட்டும் போதுமா?
எவன் வேண்டுமானாலும் எதையும் பேச நாட்டில் இதற்கு சட்டம் இல்லையா ?
கர்ப்பால் பேசினால் உடனே கூப்பாடு !!!
நல்ல நாடு ! நல்ல தலைமை !
இதற்கு அன்வாரின் பதில் என்ன என்று காஜாங்க்கில் நிருபர்கள்
தேர்தல் பரப்புரையில் கேட்கணும்.
இதை நீ இப்ப சொல்லுகிறாய் .1957 ஆம் ஆண்டிற்கு முன் சொல்லவில்லை .சீனனும் தமிழனும் நாட்டை நல்லா வளப் படுத்தியபின் இதை சொல்ல உனக்கு வெட்கமா இல்லை . 68விழுக்காடு செல்வத்தை தேடி தந்தவன் தமிழன் .30 விழுக்காடு செல்வத்தை கொடுத்தவன் சீனன் . நீ எத்துனை விழுக்காடு ???தமிழன் சீனன் தேடியதை நீ உனக்கு சுரண்டிக்கொண்டாய் . என்னடா தம்பி !!!! மற்றவன் உழைப்பில் வாழ வெட்கமாக இல்லையா ?? நீ இந்தோனேசியா காரன் தானே !!
ம இ கா நண்பர்களே ‘இஸ்மா’வின் கருத்துக்கும் உங்களுக்கும் உடன்பாடா? இதுவரை எந்த ஒரு கருத்தும் சொல்லாமல் மெளனியாய் இருக்கிறீர்களே இதுதான் தமிழர்களுக்கு செய்யும் சேவையா,அல்லது நாற்காலி பறிபோய்விடுமென்ற பயமா?
முதலில் இவர்கள் எல்லோரும் உண்மையான அதாவது பச்சை மலாய்க்காரர்கள்தானா என்று உறுதிப்படுத்த வேண்டும்!
என்ன தோழா ஆயிற்று,புலாவ் கேரி எஸ்.எம்.கே,இந்து மாணவனை ஒரு பிலாச்சான் தாக்கிய சம்பவம் தொா்பில் ஏதும்?அடியை வாங்கிட்டு வருவதைவிட திருப்பி கைமாறு செய்திட்டு வந்தா சிரப்பா இருக்கும்.நாம் தான்றியை மறவாதவராயிற்றே,நாராயண நாராயண.