நாட்டின் மூத்த செய்தியாளரும் எழுத்தாளருமான ப. சந்திரகாந்தம் நேற்று காலமானார். ஆளப்பிறந்த மருது மைந்தன், அமுதசுரபிகள், 200 ஆண்டுகளில் மலேசிய இந்தியர்கள், சாதனைப் படிகளில் சாமிவேலு போன்ற குறிப்பிடத்தக்க நூல்களை இவர் எழுதியுள்ளார். பத்திரிகையாளர், ஊடகவியலாளர், எழுத்தாளர் என குறைந்தது ஐம்பது ஆண்டுகாலம் ஊடகத்துறையில் இருந்து எண்ணற்ற சிறுகதைகள், வானொலி நாடகங்கள், தொடர்கள், சினிமா கட்டுரைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். தனது இறுதி மூச்சு வரை தமிழ் நேசனின் ஞாயிறு பதிப்பாசிரியராக பணிப்புரிந்துள்ளார். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் செம்பருத்தியின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிரித்துக் கொள்கிறோம். அன்னாரின் ஆன்மா அமைதி பெற எல்லாம் வல்ல இறையருளை வேண்டுகிறோம்.
செய்திகள்மார்ச் 3, 2014
தனித்துவம் பெற்ற சிறந்த படைப்பாளர். அன்னாரது படைப்புகளை இலக்கிய உலகம் சீர்தூக்கி அலசி ஆய்வு செய்து தகுந்த சிறப்புகளைச் செய்வதோடு சிறப்பிக்கவும் செய்ய வேண்டும். ( நூலகங்களில் இடம் பெறச் செய்வது, தமிழ்பள்ளிகளில் பாட நூலில் இடம் பெறச் செய்வது, இடைநிலைப் பள்ளிகளில் இலக்கிய பாடநூலாக இடம்பெறச் செய்வது, போன்ற காரியங்களைச் செய்ய எழுத்தாளர் சங்கங்கள் முன் வர வேண்டும்
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிரித்துக் கொள்கிறேன்.
நல்லவராயின் நன்மையே நடக்கும் நடக்கனும்,நல்லவரை இறைவனே அழைத்துசெல்வா்.தலைவனை இழந்து துயறுரும் மக்களுக்கு நானும் செம்பருத்தி அனைத்து வாசகா் சாா்பில் அனுதாபத்தை தொிவிக்கிரேன்.நாராயண சமா்பணம்.
பா. சந்திரகாந்தம் மறைந்து விட்டார். நாம் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்க வேண்டியது கடமை. ஆனால் அவரது படைப்புகளை குறிப்பாக 200 ஆண்டு மலேசிய இந்தியர்கள் என்னும் பொய்மையும் வரலாற்று இருட்டடிப்புகளும் நிறைந்த படைப்புகளை புகழ்ந்து கொண்டிருப்பதில் பொருள் இல்லை. இது போன்ற பொய்மை நிறைந்த படைப்புகளால் தான் இந்நாட்டில் நமது நிலை கேள்விக்குறியாகி இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. வரலாற்றை திரித்து எழுதி ஆளும் வர்கத்திடம் பெயர் வாங்க முயல்பவர் யாராக இருந்தாலும் நாம் துணிந்து விமர்சிக்க வேண்டும்.
1966 முதல் நட்பு …நண்பர் சை .பீர் .முகம்மது குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார் .யு .கே யில் இருந்து என் ஆழ்ந்த இரங்கலை பதிவு
செய்கிறேன் …( நன்றி செம்பருத்தி ,நன்றி சை .பீர் .நாடு திரும்பியதும்
தொடர்பு கொள்வேன் )
பா சந்திரகாந்தம் ! அந்தநாள் வானொலியில் கேட்டு பழகிய பெயர் !! மனம் வருந்துகிறது , மறக்கமுடியாத மாமனிதர் . ஆழ்த்த அனுதாபங்கள் .
கூல் தோழா கூல்,எல்லாம் விதி என்று ஆறுதல் கொள்வவோம்,அமைதி கொள்வோம்.கிருஷ்ணன் ஒரு பக்கம்,மறுபக்கம் மாபெரும் படை,அா்ஜுணனை கேட்கும் போது,அா்ஜுணன் தனக்கு கிருஷ்ணன் மட்டும் போதும் என்றாா்.நாராயண நாராயண.
ஆழ்ந்த அனுதாபங்கள்
அன்னாரின் குடும்பதினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..
அமரர் சந்திரகாந்தம் அவர்கள் மலேசியாவில் தமிழ்த் திரைப்படம் ஒன்றை 70ஆம் ஆண்களில் தயாரித்தாக அறிகிறேன்.
ஆசிரியர் ப.சந்திரகாந்தம் அவர்கள் காலமான செய்தி அறிந்து மிகவும் மனம் வருந்துகிறேன் . 1959 – 1960 – ஆம் ஆண்டுகளில் அவரிடம் படித்த மாணவர்களில் நானும் ஒருவன். ஆசிரியரின் பிரிவால் துயருற்று இருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஐய்யா அவர்களது குடும்பத்திற்கு எமது ஆழ்த்த அனுதாபங்கள் . இவரது வானொலி நாடகங்கள் சிறப்பு . சினிமா தொடர்பான செய்திகள் சேகரிப்பதில் வல்லவர் . தமிழகத்தில் பல விருதுகள் பெற்றுள்ளார் .மலேசியா வானொலி ரங்கியன் மேராஹ் ,வானொலி 6 , மின்னல் பன்பலை இவரை மறக்காது .கலைத்துறையில் எழுத்துத்துறையில் இவரது புகழ் நிலைக்கும் .
அன்னாரின் உயிர் சாந்தி அடைய பிராத்திக்கின்றோம். அன்னாரின் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
அர்த்புதமான நல்லாசிரியர் , மலேசியத் தமிழர்களுக்கு வரலாற்றுப் பெட்டகத்தை வழங்கிய நல்லாசான். அன்னாரின் அருமை சமுதாயதின் பெருமை. மறுவுலகில் நல்லோருடன் ஆன்மா இளைப்பாற பிரார்திக்கிறேன்.
பன்முகப் படைப்பாளர் ப.சந்திரகாந்தம் மலேசியத் தமிழ் உலகிற்கு ஆற்றிய அளப்பரிய இலக்கியத் தொண்டிற்கு தலை வணங்குகிறேன். வாழ்க அவரது புகழ்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்..உங்களது படைப்புகளுக்கு என்றுமே மரணம் இல்லை …..