தியான் சுவாவும் பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்குக் குறி வைக்கிறார்

batu mpபிகேஆர்  துணைத்  தலைவருக்குப்  போட்டியிடலாமா  என்று  பத்து  எம்பி  தியான்  சுவாவும் ஆலோசித்து  வருவதைப்  பார்க்கையில்  அப்பதவிக்குப்  போட்டி வலுத்து வருவதுபோல்  தெரிகிறது.

தியான்  சுவாவும்  அப்பதவிக்குக்  குறி  வைத்திருப்பதாக சின்  சியு  டெய்லியும்  குவோங்  வா  இட்  போ-வும்  தெரிவித்துள்ளன.

தியான்  சுவாவைத்  தொடர்புகொண்டு  விசாரித்தபோது  அவரும்  அதை  உறுதிப்படுத்தினார்.

“ஆனால்,  காஜாங்  இடைத்  தேர்தலுக்குப்  பின்னரே  இறுதி  முடிவு  செய்யப்படும்”,  என்றார்.

சிலாங்கூர்  மந்திரி   புசார்  அப்துல்  காலிட்  இப்ராகிம் துணைத்  தலைவர்  பதவிக்குப்  போட்டியிடப்போவதாக  ஏற்கனவே  அறிவித்துள்ளார். 

ஆனால், நடப்புத்  துணைத்  தலைவர்  அஸ்மின்  அலி,  பதவியைத்  தக்கவைத்துக்கொள்வது  பற்றி  இதுவரை  எதுவும்  சொல்லவில்லை.

பிகேஆர்  தேர்தல்  ஏப்ரல்  25  தொடங்கி  மே  11-வரை  நடைபெறும்.