கே.ஜெ.: பிரிம் உதவித் தொகையால் நிதிச்சுமை அதிகரிக்கவில்லை

brimந்துவான்   ரக்யாட்  1மலேசியா(பிரிம்)  உதவித் திட்டத்தின்கீழ்  வழங்கப்படும்  ரொக்க  உதவியால் அரசாங்கத்தின்  நிதிச்சுமை  கூடும்  என்று  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  அவரது  வலைப்பதிவில்  கூறி  இருப்பதை  இளைஞர்,  விளையாட்டு  அமைச்சர்  கைரி  ஜ்மாலுடின்  மறுக்கிறார். 

உதவித்  தொகைகளை  நிறுத்தியதால்  மிச்சமான  பணத்தைக்  கொண்டுதான்  அரசாங்கம்  பிரிம்  உதவியை  வழங்குகிறது  என்று  கைரி  ட்விட்டர்  பதிவில்  குறிப்பிட்டார்.

“பிரிம்முடன்  ஒப்பிடும்போது  வருமான  வேறுபாடு  பார்க்காமல்  எல்லாருக்கும்  பெட்ரோல்  உதவித்  தொகை  கொடுப்பதுதான்  நிதிசுசுமையக்  கொடுக்கும்  விவகாரமாகும்”,என்று  கைரி  கூறினார்.

பிரிம்  திட்டத்தைத்  தொடர்வது  விவேகமான  செயல்தானா  என்று  தம்  வலைப்பதிவில்  வினவி  இருந்த  மகாதிர்  அதனால்  நிதிச்சுமை  கூடும்  என்றும்  அத்திட்டம்  இன்றியே  அரசாங்கத்துக்கு  மக்கள்  ஆதரவு  உண்டு  என்றும்  கூறி  இருந்தார்..