இரண்டாவது பினாங்கு பாலத்துக்கு சுல்தான் அப்துல் ஹாலிம் முவா’ட்ஸாம் ஷா பாலம் எனப் பெயர் இடப்பட்டதால் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் எரிச்சல் அடைந்திருப்பதாக உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டிருக்கிறது.
அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலாயுவால்தான் இப்படி எல்லாம் செய்தி வெளியிட முடியும் என்று லிம் இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் குத்தலாகக் கூறினார்.
பாலத் திறப்புவிழாவில் செய்தியாளர் ஒருவர், அதற்குப் பெயரிடப்படுவது பற்றி மாநில அரசுடன் கலந்தாலோசிக்கப்பட்டதா என்று கேட்டிருக்கிறார்.
“நான் இல்லை என்றேன். அதை வைத்து அச்செய்தித்தாள், எங்களுக்குப் பெயர் பிடிக்கவில்லை என்றும் அதனால் எரிச்சலடைந்திருக்கிறோம் என்றும் கூறிவிட்டது. இதில் கொஞ்சமேனும் உண்மை இல்லை”, என்றாரவர்.
பெயர் வைக்கும் விவகாரத்தை வைத்து தமக்கும் கூட்டரசு அரசுக்குமிடையில் சச்சரவை உண்டுபண்ண முயல்கிறது உத்துசான் என்றவர் குற்றம் சாட்டினார்.
“நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன், இது மத்திய அரசாங்கத்தின் சிறப்புரிமை, அந்தச் சிறப்புரிமை குறித்து கேள்வி எழுப்ப மாட்டோம் என்று”.
செய்தியைத் திரித்துக்கூறும் வேலையை உத்துசான் மலேசியா செய்யக்கூடாது என்றும் லிம் வலியுறுத்தினார்.
நமது நாட்டின் மைய அரசு பினாங்கின் இரண்டாவது பாலத்திற்கு மிகப் பொருத்தமான பெயரை சூட்டியுள்ளது. மாட்சிமை தாங்கிய மன்னர் என்றும் வாழ்க.
எப்படியாவது வம்பு இழுக்கணும்.
பினாங்கு பாலத்திற்கு ஒரு சீன அறிஞர் பெயரைத்தான் சூட்ட வேணும் ,அல்லது ,தமிழ் அறிஞர் பெயரைத்தான் சூட்ட எண்டும் ,,எதற்கு ………… பெயர் ?
இஸ்லாத்தின் கோட்பாடுகளை மிகச்சிறந்த முறையில் உதுசான் கடை பிடிக்கிறது.