அஸ்மின்: ஓஎஸ்ஏ-யைக் காரணம்காட்டி நீர்நிர்வாக ஒந்தத்தை மறைக்காதீர்

azminமந்திரி புசார்  அப்துல்  காலிட்  இப்ராகிம் அதிகாரப்பூர்வ  இரகசிய  சட்ட(ஓஎஸ்ஏ)த்தின் பின்னால் பதுங்கிக்  கொண்டு  இரகசிய  ஒப்பந்தங்களைச்  செய்யக்கூடாது என  பிகேஆர்  துணைத்  தலைவர்  அஸ்மின்  அலி  கூறினார்.

நீர்நிர்வாக  ஒப்பந்தம்  பற்றி  மாநில  மந்திரி  புசார் கட்சிக்கும்   சிலாங்கூர்  மக்களுக்கும்  தெளிவாக விளக்கம்  அளிக்க  வேண்டும்  என்றாரவர்.

மாநில  நீர்நிர்வாகத்தைத்  திருத்தி  அமைப்பதன்மீது  காலிட்  கடந்த  வாரம்  கூட்டரசு  அரசாங்கத்துடன்  புரிந்துணர்வுக்  குறிப்பு(எம்ஓயு)  ஒன்றில்  கையெழுத்திட்டார்.

“அது  ஒரு  எம்ஓயு-தான். சட்டப்படி  கட்டுப்படுத்தாது. பக்காத்தான்  ரக்யாட்  எப்போது  ஓஎஸ்ஏ-க்குக்  கட்டுப்பட்டது?

“போதாதற்கு,  சிலாங்கூரில்  தகவல்  உரிமைச்  சட்டத்தையும்  ஏற்கனவே  நிறைவேற்றி  வைத்திருக்கிறோம்”, என அஸ்மின் கூறினார்.

நேற்று, பிகேஆர்  வியூக  இயக்குனர்  ரபிஸி  ரம்லி  நீர்  ஒப்பந்தம்  தொடர்பில்  சில  விவகாரங்களை  எழுப்பி கட்டணங்கள்  உயரும்  சாத்தியம்  இருப்பதாகக்  கூறியதைத்  தாமும்  ஒப்புக்கொள்வதாக  அவர்  சொன்னார்.