பேராக் மந்திரி புசார் இன்கோபொரேடட், ரிம6 பில்லியன் செலவில் மேம்பாட்டுத் திட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ள ஒரு நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் சட்டவிரோத குடியேற்றக்காரர்களை வெளியேற்ற நீதிமன்ற உத்தரவைப் பெறவுள்ளது..
அதன் தலைமை செயல் அதிகாரி அமினுடின் ஹஷிம், கடந்த ஆண்டு நவம்பர் தொடங்கி மூன்று தடவை இடத்தைக் காலிபண்ணச் சொல்லி அவர்களுக்கு அறிவிக்கைகள் கொடுத்தாயிற்று என்றும் அவர்கள் அவற்றைப் புறக்கணித்து விட்டனர் என்றும் தெரிவித்தார்.
“அவர்கள் வேண்டிக்கொண்டதை அடுத்து அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையைத் தள்ளிப்போட்டு வந்தோம். ஆனால், தாங்களாகவே வெளியேற மறுக்கிறார்கள். தப்புத் தப்பாக அறிக்கைகளையும் வெளியிட்டு வருகிறார்கள்”, என்றார்.