போலீசார் 2012 அமைதிப்பேரணிச் சட்டத்தை (பிஏஏ) அமல்படுத்துவதில் “சிந்தனைப் போக்கை மாற்றிக்கொண்டு” அமைதியாக ஒன்றுகூட மக்களுக்குள்ள அரசமைப்பு உரிமையை மதிக்க வேண்டும்.
நேற்றிரவு, போலீஸ் சீரமைப்புமீதான கருத்தரங்கில் பேசிய மனித உரிமை ஆணைய (சுஹாகாம்) துணைத் தலைவர் காவ் லேக் டீ இவ்வாறு கூறினார்.
“ஒரு பேரணி நடந்தால் அதை அவர்களின் அதிகாரத்துக்கு விடுக்கப்படும் சவாலாகவும் பேரணி தொழிலையும் வர்த்தகத்தையும் கெடுப்பதாகவும் சுற்றுப்பயணிகளை விரட்டி அடிப்பதாகவும் போலீசார் கருதி விடுகிறார்கள்”, என்றாரவர்.
அமைதிப்பேரணி சட்டப்படி பேரணி நடத்துவோர் 10 நாள்களுக்கு முன்னதாக அதைப் பற்றி போலீசுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
போலீசார் இதைத் தவறாக புரிந்து வைத்திருக்கிறார்கள் என்றாரவர்.
“பேரணி நடப்பது பற்றி 10 நாள்களுக்கு முன்னதாக போலீசுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றுதான் அச்சட்டம் கூறுகிறது. அதற்கு அனுமதி கொடுக்கும் விசயத்தை போலீசார்தான் முடிவு செய்வார்கள் என்று சட்டத்தில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை”, என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
புரியாம பேசாதிங்க மேடம். இன்ஸ்பெக்டர்க்கு கீழே இருக்கும் போலீஸ்காரர்களுக்கு சட்டத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது. அதற்க்கு மேலே இருப்பவர்களும் அரைகுறைதான். அதனால்தான் அவர்களுடைய செயலில் ‘Professionalism’ இருப்பதில்லை. இனத்துக்கு ஒரு சட்டம், ஆளுக்கு ஒரு சட்டம் என்று கலாயிக்கின்றார்கள்.
கோல் எடுத்தவனெல்லாம் மண்டோர் ஆனால் இதுதான் கதி. ஆளுக்கொரு சட்டமென்று தலைவிரித்தாடும்………