சேவைகளின் தரம் உயர்ந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளாமல் தனியார் மருத்துவக் கட்டணத்தை உயர்த்தி இருக்கக்கூடாது என்று மலேசிய பயனீட்டாளர் சங்கக் கூட்டமைப்பு (போம்கா) கூறுகிறது.
2011-இல், போம்கா மருத்துவக் கவனிப்புப் பற்றி 882 புகார்களைப் பெற்றதாகக் கூறிய அதன் உதவித் தலைவர் ரத்னா தேவி நடராஜன், அவற்றில் பெரும்பகுதி தனியார்துறை பற்றியதாகும் என்றார்.
“தனியார் மருத்துவ மனைகளில்தான் மேம்பட்ட சேவை வழங்கப்படுகிறது என்ற ஒரு கருத்து உள்ளது. ஆனால், அங்குதான் மருத்துவர்களின் கவனிப்பு நன்றாக இல்லை, சிகிச்சைக்கான காரணங்கள் தெரிவிக்கப்படுவதில்லை, பணத்துக்காக தேவையில்லாத சோதனைகள் செய்யப்படுகின்றன, தப்பான அளவுகளில் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன என்றெல்லாம் புகார்கள் வருகின்றன”, என்றவர் சொன்னார்.
இப்போது மருத்துவக் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதால் அதற்கேற்ப அவர்களின் சேவைத் தரமும் உயர வேண்டும் என்றவர் வலியுறுத்தினார்.
ஹஹஹா!எப்படியும் தரம் உயர்ந்திரும்.ஆவலோடு காத்திருப்போம்
மருத்துவர்களுக்கும் குடும்பம் இருக்கு. அவர்களும் பல்வேறு கடன்களை கட்ட வேண்டும். அவர்களும் பணம் சம்பாதிக்க வேண்டும். சீனன் எல்லாப் பொருளையும் விலை ஏற்றி விட்டான். அவனை ஒன்றும் செய்ய முடியவில்லையே. காலத்தை புரிந்து ஏறுவதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். மருத்துவர்களுக்கு ஒரு சட்டம் மற்ற வியாபாரிகளுக்கு ஒரு சட்டம் என்று பேசுவது கறிக்கு உதவாது.
இங்கே எல்லோருமே தண்டல்கல்தான் ,நாசமா போச்சு