புகைமூட்டம் கலைகிறது

airபுகைமூட்டத்தால்  பாதிக்கப்பட்ட  பகுதிகளில்  நிலைமை  சீரடைந்து  வருகிறது. இன்று  காலை  7மணிக்கு  எந்த  இடத்திலும்  காற்றின்  தூய்மைக்கேட்டு  அளவு (ஏபிஐ)  சுகாதாரத்துக்குக்  கேடு  செய்யும்  அளவுக்கு  இல்லை. 

28 இடங்களில் ஏபிஐ  மிதமான  அளவில்  இருந்ததாகவும்  23 இடங்களில் ஏபிஐ  நல்ல  நிலையில்  இருந்ததாகவும்  சுற்றுச்சூழல்  துறை  இணையத்தளம்  கூறிற்று.

பெட்டாலிங்  ஜெயாவில்  நேற்று  101ஆக(ஆரோக்கியமற்ற  நிலை)  இருந்த  ஏபிஐ  இன்று  82ஆக (மிதமான நிலை)க்  குறைந்தது. கோலாலும்பூர், பத்து  மூடாவில்  நேற்று  104ஆக  இருந்த  ஏபிஐ  இன்று  84  ஆனது.

பொதுமக்கள் தங்கள்  பகுதிகளில்  காற்றின்  தரம்  பற்றி  அறிந்துகொள்ள சுற்றுச்சூழல்  துறையின் apims.doe.gov.my  என்னும் இணையத்தளத்துக்குச்  செல்லலாம்.

-பெர்னாமா