சிலாங்கூர் அரசு, சர்ச்சைக்குரிய நீர் விநியோகத்தைச் சீரமைக்க கடந்த வாரம் மத்திய அரசுடன் கையொப்பமிட்ட புரிந்துணர்வுக் குறிப்பின் உள்ளடக்கத்தை இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடும்.
இன்று புத்ரா ஜெயாவில், எரிபொருள், பசுமைத் தொழில்நுட்பம், மற்றும் நீர்வள அமைச்சர் மெக்சிமஸ் ஒங்கிலியையும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கையும் சந்தித்த பின்னர் அதைப் பகிரங்கப்படுத்துவதென முடிவு செய்யப்பட்டதாக மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் கூறினார்.
அது பொதுவான தகவலைத்தான் கொண்டிருக்கிறது என்றும் அதனால் மாநில அல்லது தேசியப் பாதுகாப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என்றும் பிரதமர் கருதுவதாக காலிட் கூறினார்.