மக்களைப் பாதுகாக்கவே மருத்துவக் கட்டண உயர்வு: அமைச்சர்

dr subraசுகாதார   அமைச்சு,  மக்கள்  நலன்  கருதியே  கடந்த  டிசம்பரில்  மருத்துவ  ஆலோசனை  மற்றும்  சிகிச்சைக்கான  கட்டணம்  உயர்வை  அரசிதழில்  பதிவு  செய்தது  என்கிறார்  அமைச்சர்  டாக்டர்  எஸ்.சுப்ரமணியம். 

“அதில்  இரகசியம்  ஏதுமில்லை”,  என்றவர்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார். 

மலேசிய  மருத்துவ சங்கம்  இன்னும்  கூடுதலான  மருத்துவக்  கட்டணத்துக்குக்  கோரிக்கை  விடுத்தது. அமைச்சு  மக்களைக்  காக்க  மருத்துவ  கட்டணத்துக்கு  ஒரு  உச்சவரம்பை  நிர்ணயித்தது  என்று  சுப்ரமணியம்  கூறினார்.

“எம்எம்ஏ 30 விழுக்காடு  உயர்வு  வேண்டும்  என்றது. நாங்கள் 14 விழுக்காடு  போதும்  எனத்  தீர்மானித்தோம்”, என்றார்.