சிலாங்கூரில் நீர்விநியோகத் தொழில் திருத்தி அமைக்கப்படுவதால் தண்ணீர் கட்டணம் உயரலாம் என பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி விடுத்துள்ள எச்சரிக்கையை சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் தள்ளுபடி செய்தார்.
ரபிஸியின் எச்சரிக்கை பற்றி செய்தியாளர்கள் வின்வியதற்கு சுருக்கமாக “இல்லை” என்றவர் பதிலளித்தார்.
நீர் விநியோக ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட தலைவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு தண்ணீர் கட்டணம் உயராது என்பதை ஏற்கனவே அறிவித்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். இது பற்றிய மேல்விவரங்கள் பிறகு தெரிவிக்கப்படும்.
“தண்ணி கருத்திருச்சி, காலிட் தவளை சத்தம் கேட்டிருச்சி. தே.மு. கிட்ட, கிட்ட போய் சேர்ந்திருச்சி. கொஞ்சி, கெஞ்சி நின்னா குற்றம் இல்லை, வாடி புள்ள கட்டிக்கலாம்”. இப்படிதான் இருக்கு காலிட் போற போக்கு.
காலிட் அன்வாரை விளையாடி விட்ட மாதிரி தெரியுது. அன்வார்
சிலங்கோர் ஆலோசகர்,அப்படி இருந்தும் மத்திய அரசுடன் நீர்
விவகாரத்தில் எப்படி கையெழுத்து விட்டார். இனி மத்திய அரசாங்கம்
மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தண்ணிர் விலை உயரலாம் . வாழ்க !
தேனீ பாட்டாலேயே நன்கு கொட்டு கொட்டென்று கொட்டிவிட் டாரே!