இன்று புத்ரா ஜெயாவில், நீதி மாளிகைக்கு வெளியில் போலீசார், பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமின் ஆதரவாளர்கள் அங்கு ஒன்றுதிரள்வதைத் தடுத்தபோது பரபரப்பு ஏற்ப்பட்டது.
இரண்டாவது குதப்புணர்ச்சி வழக்கில் அன்வார் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அரசுதரப்பு செய்த மேல்முறையீடுமீதான விசாரணை நடக்கும் நிதிமன்ற வளாகத்துக்குள், பாதுகாப்பு காரணங்களுக்காக அவரின் ஆதரவாளர் எவரும் அனுமதிக்கப்படவில்லை.
பிகேஆர் தகவல் பிரிவு உறுப்பினர் கே.குணசேகரனும் மற்றவர்களும் போலீஸ் உத்தரவுக்குக் கடுமையாக மறுப்புத் தெரிவித்தனர்.
“எங்கள் தலைவர் (அன்வார்) உள்ளே இருக்கிறார். நாங்கள் ஏன் அங்கு போக்க் கூடாது?
“பாதுகாப்புக் காரணங்கள் என்கிறார்கள். நாங்கள் ஆபத்தானவர்கள் அல்லவே. ஆதரவு தெரிவிக்கத்தான் வந்தோம். போலீசார் வெண்டுமானால் எங்களைச் சோதித்துக் கொள்ளலாம்”, என குணசேகரன் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
முடிவில், வாயில்களை மறைக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் ஆதரவாளர்கள் நீதிமன்ற வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
வாழ்க எங்கள் தலைவர் அனுவார்
குதப்புணா்ச்சி,மலேசியாவில் மட்டுமே இந்த அதிசயம் பாா்கலாம்.என்ன கொடுமை கயீ,எதுக்கெல்லாம் ஆதரவு என்று தராதரமே கிடையாதா.விட்டா தீகுலிப்பான்க போல.நாராயண நாராயண.