இரண்டாவது குதப்புணர்ச்சி வழக்கில் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மேல்முறையீட்டில் அரசுதரப்பு வெற்றிபெற்றால் அன்வார் காஜாங் இடைத் தேர்தலில் போட்டியிட முடியாமல் போகும் சாத்தியம் அதிகம் இருப்பதாகக் கூறுகிறார் பாயான் பாரு பிகேஆர் எம்பியான சிம் ட்ஸே ட்ஸின்.
முறையீட்டு நீதிமன்றம் இன்றும் நாளையும் அவ்வழக்கை விசாரிக்கிறது.
“வெள்ளிக்கிழமை விசாரணை முடிந்ததும் தீர்ப்பு திங்கள்கிழமை பிற்பகலில் வழங்கப்படலாம்.
“அன்வார் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால், தண்டனையை நிறுத்திவைக்க கூட்டரசு நீதிமன்றத்துக்கு மனுச் செய்வதற்கு அவரின் வழக்குரைஞர்களுக்குப் போதுமான கால அவகாசம் இருக்காது. அவர் சிறை வைக்கப்படுவார்”, என சிம் இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.
அன்வார் சிறைவிக்கப்பட்டால் அடுத்த நாள், மார்ச் 11-இல், காஜாங் இடைத் தேர்தலுக்கான வேட்பாளராக அவரை நியமிக்க முடியாமல் போகும் என்றவர் விளக்கினார்.
“இது எங்கள் காஜாங் திட்டத்தை முறியடிக்கும் பிஎன்னின் அரசியல் சதி……மக்கள் இதை உணர வேண்டும்”, என்றவர் எச்சரித்தார்.
கொலை
எழுத்து பிழைக்கு மன்னிக்கவும் .
மொங்கோலியா பெண்ணை மரணத்திற்கு காரணம் ஆனவர்கள் வெளியில் உலா வந்து கொண்டிருகிறார்கள். பின்னால் விளையாடிய வர்க்கு மட்டும் கேஸ் மேல கேஸ். என்ன நாடு இது.. கடவுள் இருக்கிறானா என்பது சந்தேகமே…..
இதெல்லாம் மக்களுக்கும் தெரியும். நடப்பது நடந்தே தீரும். நாளை கர்பால் சிங்க்குக்கு “நெஞ்சு வலி” வந்து கோர்ட்டு அல்லலோ கல்லலொ படும். கேஸ் ஒத்திவைக்கப்படும். கொஞ்சம் நடிங்க பாஸ்.
அன்வார் வேட்பாளராக மனு தாக்கள் செய்ய முடியாத சூழ்நிலை உருவானால்,கட்சியின் தலைவி வான் அஸிசா மனு தாக்கள் செயியலாம்,அமோக வெற்றி பெறுவார்,மேலும் காஜாங்கில் இரண்டு பெண் புலிகள் மோதட்டுமே பொருத்தமாக இருக்கும் !
சரியான போட்டி
அன்வார் காஜாங் தேர்தல்ல எங்க ஜெயிசிருவரோ என்கிற பயதுலதனே இந்த வேலையெல்லாம் நடக்குது.