கூட்டரசு அரசாங்கமும் சிலாங்கூர் அரசும் எதுவும் செய்யாமலிருப்பதால் அதிருப்தி அடைந்துள்ள சீபோர்ட் பள்ளியைக் காப்போம் அமைப்பு அவ்விவகாரத்தை காஜாங் இடைத் தேர்தலுக்குக் கொண்டுசெல்ல தீர்மானித்துள்ளது.
இடைத் தேர்தலுக்கான பரப்புரை நடக்கும் காலத்தில் காஜாங் வேட்பாளரான பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமிடம் இடமாற்றம் செய்யப்பட்ட அப்பள்ளி தொடர்பில் ஒரு மகஜர் கொடுப்பதென மலேசிய தமிழ்ப் பள்ளி வாரியம் கடந்த வாரம் முடிவு செய்ததாக அதன் தலைவர் ஆர்.கண்ணன் கூறினார்.
“(அப்பள்ளி மாணவர்களின்) குடும்பத்தார் அன்வாரிடம், அவர் மந்திரி புசார் ஆவார் என்று கூறப்படுவதால், மகஜர் கொடுக்க எண்ணியுள்ளனர்”, என்றாரவர்.
அதேபோல் காஜாங்கில் போட்டியிடும் மசீச வேட்பாளர் சியு மெய் பான் -னிடமும் ஒரு மகஜர் கொடுக்கப்படும்.
ஆமாம்யா சீபோட் பள்ளி,செறுப்பால் அடிச்ச கதை, எல்லாத்தையும் கொண்டுபோய் அரசியல் பன்னுங்க,வாழ்க நாராயண நாராயண.