இந்தியர் விவகார வாரியத்தை மீண்டும் உயிர்பிக்கும் முயற்சி ஏன்? வேதா வினவுகிறார்

hindrafஇந்தியர்  விவகாரங்கள் மீதான  அமைச்சரவைக்  குழுவை  மீண்டும் உயிர்ப்பிக்கும்  நடவடிக்கையில்  அரசாங்கம்  ஈடுபட்டிருப்பது  குறித்து  கேள்வி  எழுப்பும்  இண்ட்ராப்  தலைவர்  பி.வேதமூர்த்தி,  அது,  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு இந்தியர்  ஆதரவை  மீட்டுத்தரும்  முயற்சியா  என்றும்  வினவுகிறார். 

ஆனால்,  அது  நடக்காது. ஏனென்றால்  இந்திய  சமூகத்தின்  முன்னேற்றத்தை  இலக்காகக்  கொண்டு  உருவாக்கப்பட்ட  எல்லாக்  குழுக்களுமே  தோற்றுப்  போய்விட்டன,  மக்களும்  அரசாங்கத்தின்மீது  நம்பிக்கை  இழந்துவிட்டனர்  என்றாரவர்.

“பிஎன்னின்  நிறைவேற்றப்படாத  வாக்குறுதிகளையும்  இந்திய  அரசியல்  தோழர்களுடன்  சேர்ந்து  அவர்கள்  அரங்கேற்றிய  வாயாங்  கூலிட்டையும் (பாவைக் கூத்து)  பார்த்துப் பார்த்து  இந்திய  சமூகத்துக்குப்  போதும்  போதுமென்று  ஆகிவிட்டது. மஇகா   மீது  அவர்களுக்கு  சுத்தமாக  நம்பிக்கை  போய்விட்டது”,  என்று  வேதமூர்த்தி  இன்று  ஓர்  அறிக்கையில்  கூறினார். 

2010-க்குப்  பின்னர்  செயல்படாமல்  கிடக்கும்  அந்த  அமைச்சரவைக்  குழுவின்  முதல் கூட்டம்    நஜிப்  தலைமையில்  நடந்ததாக  மலேசியா  டுடே  செய்தித்தளத்தில்  இன்று  செய்தி  வெளியாகி  இருந்தது. .