பிரதமர்: செல்வாக்கு குறைந்தால் குறையட்டும், நாடு நன்றாக இருக்க வேண்டும்

najibஉதவித்தொகை  குறைப்பு,  புதிய  வரிகளின்  அறிமுகம்  போன்றவற்றால்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  செல்வாக்குக் கடுமையாக  சரிந்திருந்தாலும்  அதைப்  பற்றி  அவர்  கவலைப்படவில்லை.

“நாட்டின்  நீண்டகால  நன்மைக்காக  என் குறுகியகால  செல்வாக்கை  விட்டுக்கொடுக்க  தயார்”,  என்கிறார்  அவர்.

அப்படிப்பட்ட  நடவடிக்கைகளை  எடுக்காதிருந்தால்  மலேசியாவின்  இறையாண்மைக்கே  ஆபத்து  ஏற்பட்டிருக்கும்  என்றாரவர்.

“பல  நாடுகள்  அவற்றின்  சுதந்திரத்தை  இழந்து  பன்னாட்டுப்  பண  நிறுவனம்  சொல்கிறபடி  ஆடுகின்ற  நிலைக்குத்  தள்ளப்பட்டிருக்கின்றன”,  என்றவர்  சுட்டிக்காட்டினார்.

“பிரதமர்  என்ற  முறையில்  மலேசிய  மக்களைப்  பாதுக்காப்பது  என்  பொறுப்பாகும்”,  என்றாரவர்.