துணை அமைச்சர்: மாணவர்கள் இல்லை; தமிழ்ப்பள்ளியும் இல்லை

knathanபினாங்கில் தமிழ் இடைநிலைப் பள்ளி  அமைக்கக்  கோரிக்கை  விடுக்கும்  மாநில  அரசு  முதலில்,  அங்கு  தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்  எண்ணிக்கை  உயர்வதற்கு   உதவ  வேண்டும்   எனக்  கல்வி  துணை  அமைச்சர் II, பி.கமலநாதன்  வலியுறுத்துகிறார்.

பினாங்கு  அரசும்  சில  என்ஜிஓ-களும்,  தமிழ்  இடைநிலைப்  பள்ளிக்குக்  கோரிக்கை விடுத்திருப்பது  பற்றிக்  கருத்துரைத்தபோது  கமலநாதன்   இவ்வாறு  கூறினார்.

கடந்த  ஆண்டில்,  தமிழ்ப்பள்ளி  மாணவர்களில் 837 பேர்தான்  பிஎம்ஆர்  தேர்வு  எழுதினார்கள்  என்றும் 468  பேர்தான்  எஸ்பிஎம்  எழுதினார்கள்  என்றும்  துணை  அமைச்சர்  தெரிவித்தார்.

– Bernama