சிங்கப்பூர்: தண்ணீர் கட்டணத்தை மறுபரிசீலனை செய்யும் உரிமை மலேசியாவுக்கு இல்லை

agreementசிங்கப்பூரும்  மலேசியாவும்  செய்துகொண்ட தண்ணீர் ஒப்பந்தத்தின்படி  1987-இல்  தண்ணீர்  கட்டணத்தை  மலேசியா  மறுபரிசீலனை  செய்திருக்கலாம்  ஆனால்,  அப்படிச்  செய்யவில்லை.  அதனால்,  கட்டணத்தை  மறுபரிசீலனை  செய்யும்   உரிமையை  அது  இழந்து  விட்டது  என்கிறார்  சிங்கை  வெளியுறவு  அமைச்சர்  கே.சண்முகம்.

“மலேசியா  தண்ணீர்  கட்டணத்தைத்  திருத்தி  அமைக்கும்  உரிமையை  இழந்துவிட்டது  என்பதே  சிங்கப்பூரின்  நிலைப்பாடாகும்.  தண்ணீர்  ஒப்பந்தம் 25  ஆண்டுகளுக்குப்  பிறகு  கட்டணத்தை  மறுபரிசீலனை  செய்ய  இடமளிக்கிறது. அந்த  வகையில்,  1987-இல்,  மறுபரிசீலனை  செய்யும்  உரிமை  இரு  தரப்புகளுக்குமே இருந்தது.

“ஆனால், மலேசியா மறுபரிசீலனை  செய்ய  விரும்பவில்லை.  அதற்கு  நியாயமான  காரணங்களும்  இருந்தன”,  என்றாரவர்.
சிங்கப்பூர்  நாடாளுமன்றத்தில்  கேள்வி  ஒன்றுக்குப்  பதிலளிக்கையில்  சண்முகம்  இவ்வாறு  கூறினார்.