அம்னோ மகளிர் தலைவர், ஷரிசாட் அப்துல் ஜலில், தாம் மசீச உதவித் தலைவர் சியு மெய் பன்னிடம் காஜாங் இடைத் தேர்தலுக்குப் பின் “ஒரு கணவரைத் தேடிக்கொள்ள வேண்டும்” என்று கூறியது விளையாட்டாகச் சொல்லப்பட்ட ஒன்று எனவும் சியுவை அவமதிக்கும் நோக்கம் துளியும் அதில் இல்லை எனவும் விளக்கினார்.
“அவரை (சியுவை) எனக்கு நன்றாக தெரியும். வேடிக்கையாக பேசிக் கொண்டிருந்தோம். ஒரு சகோதரியைக் கேலி செய்வதுபோல் கேலி செய்து கொண்டிருந்தேனே தவிர அவரை அவமதிக்கவில்லை”, என்றுரைத்த ஷரிசாட், பக்காத்தான் ரக்யாட் தலைவர்கள்தான் அதைப் பெரிதுபடுத்தி வருகிறார்கள் என்றும் சாடினார்.
யாரடி நீ மோகினி .
இது ஒரு கேலிச் செய்தியாகவே எடுத்துக் கொள்வோம்.
வேண்டாம் தேவையற்ற சர்ச்சை.
உன்னுடைய பொய் அறிக்கை எங்களுக்கு தேவை இல்லை
அரசியல்வாதிகள் விளையாட்டாகச் சொன்னாலும் நாங்கள் வினையாகத்தான் எடுத்துக் கொள்ளுவோம்! அது தானே அரசியல்!
250 மி எங்கே ?? எங்கே ??