மலேசிய ஊழல்-தடுப்பு ஆணையம், தலைமைக் கணக்காய்வாளரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட முறைகேடுகள்மீது விசாரணை நடத்தி மேல்நடவடிக்கையாக வழக்குத் தொடுப்பதற்காக விசாரணை அறிக்கைகளைத் தலைமை வழக்குரைஞர் அலுவலகத்துக்கு(ஏஜிசி) அனுப்பி வைத்தது. ஆனால், ஏஜிசி வழக்குத் தொடுக்கத் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளது.
ஏஜிசி-இன் முடிவைக் கண்டித்த கூட்டரசுப் பிரதேச பாஸ் இளைஞர் பகுதி துணைத் தலைவர் நுருல் இஸ்லாம் முகம்மட், அந்த ஒன்பது விசாரணை அறிக்கைகளையும் ஏஜிசி வெளியிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்..
“ஏஜிசி விசாரணை அறிக்கைகளை வெளியிட்டு வழக்கைக் கைவிடப்பதற்கான காரணத்தையும் தெரிவிக்க வேண்டும்”,என அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.