சிலாங்கூர் நீர்ப் பங்கீட்டுத் திட்டத்தின் மூன்றாம் கட்டம் மார்ச் 10-இல் அமல்படுத்தப்படும்போது 3.6 மில்லியன் பேர் நீர் விநியோகத் தடையால் பாதிக்கப்படலாம் என தேசிய தண்ணீர் சேவை ஆணையம்(ஸ்பான்) கூறியது.
சிலாங்கூர் அரசு, சுங்கை சிலாங்கூர் அணைக்கட்டிலிருந்து திறந்துவிடும் நீரின் அளவை மேலும் குறைக்க முடிவு செய்திருப்பதன் விளைவு இது என ஸ்பான் தலைமை செயல் அதிகாரி தியோ யென் ஹுவா கூறினார்.
“இரண்டாம் கட்டத்தில் 431,,000 வீடுகள் பாதிகக்ப்பட்டன. மூன்றாம் கட்டத்தில் 722,032 வீடுகள் அதாவது 3.6 மில்லியன் பேர் பாதிக்கப்படுவர்”, என்றாரவர்.