நேற்று, முறையீட்டு நீதிமன்றத்தில் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமின் குதப்புணர்ச்சி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு “வக்கிரமானது” என்றும் நாட்டுக்கு பெரிய அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்றும் பிகேஆர் கூறியுள்ளது.
“தீர்ப்பு வக்கிரமானது. நீதியின் எல்லாக் கேட்பாடுகளுக்கும் எதிரானது. வெட்கக் கேடானது.
“அன்வார் இப்ராகிமுக்கு மட்டுமல்ல, நாட்டு மக்கள் அனைவருக்குமே அநீதி இழைக்கப்பட்டுள்ளது”, என பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி ஓர் அறிக்கையில் கூறினார்.
“நீதிமன்றங்கள் அதிகாரத்தில் உள்ளவர்களின் கைப்பாவைகளாக செயல்படுகின்ற நிலையை மீண்டும் காண்கிறோம். மக்கள் இந்த அநீதியைப் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பது நிச்சயம்”, என்றாரவர்.
நீதி இல்லாத ஆட்சியில் இறைவனின் தீர்ப்பு வேறுமாதிரி
அமையலாம் .சதி எப்போதும் வெல்லாது .எல்லா புகழும் இறைவனுக்கே !
எல்லாம் பணம் படுத்தும் பாடு!!
காலம்தான் இதற்ட்கு எல்லாம் பதில் சொல்லணும்!! ம்ம்ம்ம்,,,..