அன்வார் வழக்கின் தீர்ப்புக்கு மனித உரிமைக் குழுக்கள் கண்டனம்

1 anwaarமுறையீட்டு   நீதிமன்றத்தில், அன்வார்  இப்ராகிம்  மீதான  குதப்புணர்ச்சி  வழக்கில்  அவருக்கு  ஐந்தாண்டுச்  சிறைத்  தண்டனை  வழங்கப்பட்ட  தீர்ப்பை,  உள்நாட்டையும்  வெளிநாடுகளையும்  சேர்ந்த  மனித  உரிமைப்  போராளிகள்  கண்டித்துள்ளனர்.

“நீதியின் பெயரால் அன்வாருக்கு  இழைக்கப்படும்  முடிவில்லா  கொடுமைகள்  மலேசிய  நீதித்துறையில்  படிந்துள்ள சகிக்க  முடியாத  ஒரு கறையாகி  விட்டது”,  எனப்  பன்னாட்டு  மனித  உரிமை கூட்டமைப்பின்  தலைவர்  கரிம்  லஹிட்ஜி  கூறினார்.

“நேற்றைய  அதிர்ச்சிதரும்  தீர்ப்பு  அன்வாருக்கு எதிரான  ஆளும்  கூட்டணியின்  15-ஆண்டுக்கால  பழிவாங்கும்  படலத்தின்  புத்தம்புது  அத்தியாயமாக  அமைகிறது”,  என  கரீம்  மலேசியாவின்  மனித  உரிமை  அமைப்பான  சுஹாகாமுடன் இணைந்து  வெளியிட்ட  அறிக்கை  ஒன்றில்  கூறினார்.