குதப்புணர்ச்சி வழக்கில் குற்றவாளி என்ற தீர்ப்பைத் தள்ளுபடி செய்ய கூட்டரசு நிதிமன்றத்துக்கு மனு செய்திருப்பதாக அன்வார் இப்ராகிமின் வழக்குரைஞர் ராம் கோபால் கூறினார்.
“அன்வாருக்கான பிணையை இப்போது செலுத்திக் கொண்டிருக்கிறோம். முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தாகி விட்டது”, என்றாரவர்.
கடந்த வெள்ளிக்கிழமை, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தள்ளுபடி செய்து குதப்புணர்ச்சி வழக்கில் அன்வார் குற்றவாளிதான் என்று தீர்ப்பளித்த முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு ஐந்தாண்டுச் சிறைத் தண்டனையும் விதித்தது.
தண்டனையை நிறுத்திவைக்க விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்ற அந்நீதிமன்றம் அவருக்கான பிணைப் பணத்தை இன்று காலை மணி 11-க்குள் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
அன்வார் நீ உள்ளே இருந்தால் தான் அவனால் வெளியே இருக்க முடியும் ,அதனால் தான் இந்த படலங்கள் ,பொறுத்திரு
தலைவா ,ஆயிரம் கைகள் மறைத்தாலும் கதிரவனை மறைக்க முடியாது ,உன் மீது குற்றத்தை சுமத்த -சுமத்த நீ
மேலே உயர்ந்து கொண்டே போகிறாய் நைனா .
நடப்பதெலாம் சட்டபபூா்வமாக சிரப்பா நடக்குது,பொருமையா இருந்து பாா்ப்போம்,உணா்சியை தவிா்ப்போம்,இறை நீதி சாகாது நிரபராதியாயின் வெற்றி நிச்சயம்.போட்டு வாங்கி இருப்பின் 1/2 நிரபராதி(பழிவாங்க திட்டமிட்டு சதி வளையில் சிக்கவைத்தல்).அதற்கான தண்டனை அனுபவித்தாகிவிட்டது என்று கருதும் போது( இன்சாப்),இறைவனிடமிருந்து மன்னிப்பு கிடைக்கும்.நாராயண சமா்பணம்.