நாடாளுமன்ற உறுப்பினர்கள்(எம்பி-கள்) பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி)யின் நன்மைகளையும் அது செயல்படும் விதத்தையும் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று பேரரசர் அப்துல் ஹாலிம் முவா’ட்ஸாம் ஷா வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் 2014-ஆம் ஆண்டுக்கான கூட்டத்தொடரைத் தொடக்கிவைத்து உரையாற்றிய பேரரசர், ஜிஎஸ்டி என்பது கூடுதல் வரி அல்லவென்பதையும் நடப்பில் உள்ள விற்பனை மற்றும் சேவை வரிக்கு (எஸ்எஸ்டி)ப் பதிலாகத்தான் அது கொண்டுவரப்படுகிறது என்பதையும் எம்பிகள் விளக்கிக்கூற வேண்டும் என்றார்.
மாற்றரசுக் கட்சிகள், 2015-இல் அமலுக்குவரும் ஜிஎஸ்டி-யால் வாழ்க்கைச் செலவுகள் கூடி மக்கள் பெரிதும் துன்புறுவர் என்றுகூறி அதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
இருக்கின்ற வரிகள் போதாதென்று மேலும் ஜிஸ்டி வரியா? அரசு கொடுக்கும் ‘பிரீம்’ பணத்தை வாங்குவதற்கு கால்கடுக்க நிற்கும் அவலத்தை பார்த்துமா புதிய வரியை அமுல்படுத்த பார்க்கிறது இந்த அரசாங்கம்? போதுமையா வரி. விலை வாசியை கட்டுபடுத்தினால், வேண்டாமே இந்த ‘பிரீம்’ மக்களை காப்பாற்ற வந்த மட்சிமை தங்கிய பேரரசருக்கு எங்களது நன்றி.
………………பேரரசன்.