கதவும் வால்பகுதியும் எம்ஏஎஸ் விமானத்துக்குச் சொந்தமானவை அல்ல

boeingகடலில்  மிதக்கக்  காணப்பட்ட   விமானத்தின்  உடைந்த  பகுதிகள் காணாமல்போன  எம்ஏஎஸ்  விமானத்துக்குச்  சொந்தமானவை  அல்ல  என்பதை  வியட்னாமிய  அதிகாரிகள்  உறுதிப்படுத்தியுள்ளனர்.

சிவில்  விமானப்  போக்குவரவுத்  துறை (டிசிஏ)  தலைமை  இயக்குனர்  அஸஹாருடின்  அப்துல்  ரஹ்மான்  இதைத்  தெரிவித்ததாக  பெர்னாமா  அறிவித்துள்ளது.

இதற்குமுன்னர், தேடும்  பணியில்  ஈடுபட்டுள்ள வியட்னாமிய  குழு, கடலில்  ஒரு  விமானத்தின்  கதவும்  வால்பகுதியும்  மிதக்கக்  கண்டதாகவும்  அவை மலேசிய  விமான  நிறுவன (எம்ஏஎஸ்)த்தின்  போயிங்  777-200க்குச்  சொந்தமானவையாக  இருக்கலாம்  என்று நம்புவதாகவும்  அறிவித்திருந்து  ஓரளவுக்கு  நம்பிக்கையைக்  கொடுத்திருந்தது.