பேரரசர் நாடாளுமன்றக் கூட்டத்தைத் தொடக்கிவைக்கும்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்பிகள்) வெண்ணிற சடங்குபூர்வ ஆடை அணிவதுதான் வழக்கமாகும். ஆனால், இன்று பக்காத்தான் எம்பிகள் அனைவரும் “எதிர்ப்பை”க் காட்ட கருப்பு ‘சூட்’ அணிந்து நாடாளுமன்றம் சென்றனர்.
அந்த உடை “அநீதிக்கும் அதிகார அத்துமீறலுக்கும்” எதிர்ப்புத் தெரிவிக்கும் அடையாளமாகும் என பக்காத்தான் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.
“மூர்க்கத்தனமும் கொடூரமும்” நிறைந்தவர்களுடன் ஒட்டி உறவாட விரும்பவில்லை என்பதால், நாடாளுமன்ற மரியாதை அணிவகுப்பிலும் அரச விருந்திலும் கலந்துகொள்ளப்போவதில்லை என பக்காத்தான் ஏற்கனவே அறிவித்திருந்தது.
“ஆகோங்கிடமுள்ள விசுவாசத்தின் காரணமாகவே (அரச உரை நிகழ்வில்) கலந்துகொள்ள வந்தோம்”, என அன்வார் கூறினார்.
நாளைய நாடாளுமன்றக் கூட்டத்தையும் பக்காத்தான் எம்பிகள் ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பர்.
மக்களுக்கு புத்துனா்வு கொடுக்கவா இந்க அறிக்கை,அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.ஏமாறுபவன் இருக்கும் வரை அரசியல் சிரப்பா நடக்கும்.ஒரு வெள்ளிக்கு பதிலா 1.5 கொடுத்தா ஏன் அதிகம்னு கேட்கனும் அதே 0.8 கொடுத்தாலும் குரைவு ஏன் கேட்கனும்.வாழ்க நாராயண சமா்பணம்.