பிஎன் எம்பி: பக்காத்தான் புறக்கணிப்பு ஒரு துரோகச் செயல்

1 anwarஆட்சி  செய்வோருக்கும்  நீதித்  துறைக்கும்  எதிர்ப்பைக்  காட்டும்  நோக்கில் நாளை  நாடாளுமன்றக்  கூட்டத்தைப்  புறக்கணிக்கப்  போவதாக பக்காத்தான்  அறிவித்திருப்பது  மக்கள்  அவர்களுக்கு  வழங்கிய  அதிகாரத்துக்குச்  செய்யும் துரோகமாகும்  என  பிஎன்  எம்பிகள்  கூறினர்.

கடந்த  வெள்ளிக்கிழமை  முறையீட்டு  நீதிமன்றம்  அன்வார்  இப்ராகிம்  குற்றவாளி  என்று  தீர்ப்பளித்தது  ஒரு  “தனிப்பட்ட  விவகாரம்”,  அதை நாடாளுமன்றத்துக்  கொண்டுவரக்கூடாது  என தஞ்சோங்  காராங்  எம்பியும்  சிலாங்கூர்  அம்னோ  தொடர்புக்குழு  உறுப்பினருமான  நோ  ஒமார்  குறிப்பிட்டார்.

“அது ஒரு தனிப்பட்டவரின்  விவகாரம். நடாளுமன்றத்துக்கு வருவது  அவர்களின்  கடமை. (வராமல்  இருப்பது) மக்களின்  நம்பிக்கையை  நாசப்படுத்தும்  செயல்”,  என நாடாளுமன்ற  வளாகத்தில் நோ  கூறினார்.

மசீச  உதவித்  தலைவர்  வீ கா  சியோங்கும், என்னதான்  மனக்குறைகள்  இருந்தாலும்  ஒரு  எம்பி  நாடாளுமன்றத்துக்கு  வரக்  கடமைப்பட்டுள்ளார்  என்றார். .

“அது  நம்  கடமை”,  என்றவர்  சுருக்கமாகக்  கூறினார்.