ஒரு கர்பாலை ஒழித்தால் 100 கர்பால்கள் எழுவர்

1 karpalடிஏபி  தலைவர்  கர்பால்  சிங், அரசாங்கம்  ஒரு  கர்பாலைத் தீர்த்துக்  கட்டினால்  100 கர்பால்கள்  எழுவர்  என  எச்சரித்துள்ளார்.

தமக்கு  எதிரான  அரசநிந்தனை  வழக்கில்  அளிக்கப்பட்ட  தீர்ப்பு  குறித்து  கருத்துரைத்த  கர்பால்,   புக்கிட்  குளுகோரில்  நாடாளுமன்ற  தேர்தல்  ஒன்றையும்  எதிர்நோக்க  பிஎன்  தயாராக  வேண்டும்  என்றார்.

இன்று  கோலாலும்பூர்  உயர்  நீதிமன்றத்தில் அவருக்கு  ரிம4,000  அபராதம்  விதிக்கப்பட்டதற்கு  எதிராக   மேல்முறையீடு  செய்யப்  போவதாகவும்  கர்பால்  தெரிவித்தார்.
“பேராக்  அரசமைப்பு  நெருக்கடியின்போது  ஒரு  வழக்குரைஞர்  என்ற  முறையில்  என்  கருத்தைத்  தெரிவித்தேன். அவ்வளவுதான்.

“சிங்குகள்  என்றும்  கிங்குகள்தாம். ஒரு கர்பாலை  ஒழித்தால் 100  கர்பால்கள்  எழுவர்”,  என்றாரவர்.

அபராதம்  விதிக்கப்பட்டது   டிஏபி  தலைவர்   பதவியையும்  பாதிக்கும் என்று  கூறிய  கர்பால்,  குற்றவாளி  என்று  தீர்ப்பளிக்கப்பட்டவ்ர்கள்  கட்சிப்  பொறுப்புகள்  வகிக்கக் கூடாது  என்றார்.