அவைத் தலைவர்: எம்எச்370மீது விவாதம் தேவையில்லை

1 parl239 பயணிகளுடன்  மலேசிய  விமான  நிறுவனத்தின்  விமானமொன்று   காணாமல்  போனது  பற்றி  நாடாளுமன்றம்  விவாதிக்க  வேண்டும்  என்று  மக்களவையில்  கொண்டுவரப்பட்ட  தீர்மானத்தை அவைத்  தலைவர்  பண்டிகார்  அமின்  மூலியா  நிராகரித்தார்.

இன்று  காலை  கேள்வி  நேரத்துக்குப்  பின்னர்,  மாபுஸ்  ஒமார்(பாஸ்- பொக்கொக்  சேனா)  தாம்  முன்வைத்த  தீர்மானம்  நிராகரிக்கப்பட்டது  குறித்து  கேள்வி  எழுப்பினார்.

“அவைத்  தலைவர்  விமானம்  காணாமல்போன  விவகாரம்  பற்றி  முழு  விசாரணை  நடப்பதைக்  காரணம் காட்டி  அத்தீர்மானத்தை  நிராகரித்துள்ளார்.

“ஆனால், மலேசிய  மக்களைப்  பிரதிநிதிக்கும்  நாடாளுமன்றம் அந்த  விமானத்தில் பயணம்  செய்தவர்களின்  குடும்பத்தாருக்கு வருத்தத்தைப்  பதிவு  செய்துகொள்வது  அவசியமாகும்”,  என மாபுஸ்  கூறினார்.

அப்போது,   மக்களவைத்  துணைத் தலைவர்  இஸ்மாயில்  முகம்மட் சைட்  குறுக்கிட்டு  அவைத்  தலைவரின்  முடிவே சரியானது   என்பதை  வலியுறுத்தினார்.

மேலும்,  நேற்று நாடாளுமன்றத்தில்  ஒரு  நிமிடம்  மவுனம்  கடைப்பிடிக்கப்பட்டதையும்  அவ்ர்  சுட்டிக்காட்டினார்.