‘ஏர் பிரான்ஸைக் கண்டுபிடிக்க ஐந்து நாள் ஆயிற்று’

1-abd-rahimஎம்எச்370  விவகாரத்தைக் கையாளும்  விதம்  சரியல்ல  என்று  உலக  நாடுகள்  குறைகூறும்  வேளையில்,  காணாமல்  போன  விமானத்தைக்  கண்டுபிடிக்க  நீண்ட  காலம்  பிடிப்பது  ஒன்றும்  வழக்கத்துக்கு  மாறானது  அல்ல  என்கிறார்  தற்காப்பு  துணை  அமைச்சர்  அப்துல்  ரஹிம்  பக்ரி.

“ஏர்  பிரான்ஸின்  உடைந்த  பகுதிகளைக்  கண்டுபிடிக்க  ஐந்து  நாள்  ஆனது. ஆடம்  ஏர்  விமானத்தைக்  கண்டுபிடிக்க  ஏழு நாளானது.  போலீசும்  சிவில்  போக்குவரத்துத்  துறையும்  பல  கோணங்களில்  ஆராய்ந்து  வருகிறார்கள். அவர்கள்மீது  நம்பிக்கை  வைப்போம். குறைகூறுவோர்  இதைப்  புரிந்துகொள்ள  வேண்டும்”,  என்றாரவர்.

ஏர் பிரான்ஸ்   விமானம் 2009இல்  அட்லாண்டிக்  பெருங்கடலில்  விழுந்து  நொறுங்கியது.   ஆடம்  ஏரின்  விமானம் 2007-இல் மகாசார்  நீரிணையில்  விழுந்து  சிதறியது.

மலேசிய  அரசாங்கமும்  முடிந்த  அளவுக்கு  எம்எச்370  பற்றி  எல்லாத்  தகவல்களையும் வழங்கிக்  கொண்டுதான்  இருக்கிறது. ஆனால், சட்டப்  பிரச்னைகள்  வரலாம்  என்பதால்  சில  தகவல்களை  வெளியிட  முடிவதில்லை  என்றும்  அப்துல்  ரஹிம்  கூறினார்.

பல்வேறு  துறைகள்  வழங்கும்  “தகவல்களில்  முரண்பாடு  காணப்படுவதையும்”  அவர்  ஒப்புக்கொண்டார். “முடிவில்  சரியான  விடை  கிடைக்கும்”,  என்றாரவர்.