எம்பி: எம்எச்370 விவகாரத்தில் ஒரு பேச்சாளர் போதும்; பலர் தேவையில்லை

mpகாணாமல்போன  எம்எச்370  பற்றி  அனைத்துலக  ஊடகங்களுக்குத்  தகவல்  சொல்ல  ஒரு  பேச்சாளர்  மட்டுமே  இருக்க  வேண்டும்  என  டிஏபி-இன்  செகாம்புட்  எம்பி  லிம் லிப்  எங்  பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்கைக்  கேட்டுக்கொண்டிருக்கிறார். பலரும் அதைப்  பற்றிப்   பேசும்போது   ‘குட்டையைக்  குழப்பி’  சில  நேரங்களில்  மலேசியாவுக்கு  “தர்மசங்கடமான  நிலையை”  உண்டு  பண்ணி விடுகிறார்கள்.

“பல  அமைச்சர்கள்,  துணை  அமைச்சர்கள்,  அதிகாரிகள் நடந்த  சம்பவம்  பற்றியும்  விமானம்  காணாமல்போன  இடம்  பற்றியும் மாறுபட்ட  தகவல்களைத்  தருகிறார்கள்”,என  லிம்  கூறினார்.

ஆறு நாள்கள்  ஆன  பிறகும்  காணாமல்போன  விமானத்தைக்  கண்டுபிடிக்க  முடியாமல்  இருக்கின்ற  நிலையில், அவ்விவகாரம்  தொடர்பில்  முரண்பட்ட  தகவல்களைக்  கொடுப்பதால்  மலேசியா  அனைத்துலக  அரங்கில்  கடுமையாகக்  குறைகூறப்பட்டுள்ளது.

நியமிக்கப்படும் பேச்சாளர் விசயம்  அறிந்தவராகவும்  “”நன்கு  ஆங்கிலம்  பேசக்கூடியவராகவும்”  இருத்தல்  வேண்டும்  என  லிம்  குறிப்பிட்டார்.