புதிய திருப்பம்: ராடாரிலிருந்து மறைந்த பின்னரும் விமானம் சில மணி நேரம் பறந்தது

planeஎம்எச்370  பயணக் கதையில்  புதிதாக  ஒரு  திருப்பம்  ஏற்பட்டுள்ளது. அந்த  விமானம்  ராடாரின்  கண்காணிப்பிலிருந்து  மறைந்த  பின்னரும்  நீண்ட  நேரம் பறந்திருக்க  வேண்டும்  என  அமெரிக்க  ஆய்வாளர்கள்  கருதுகின்றனர். விமான  இயந்திரம்  அனுப்பி  வைத்த  தகவல்களிலிருந்து  இது  அறியப்படுகிறது.

அந்த  போயிங் 777 விமானத்தின்  இயந்திரங்கள் பராமரிப்பு-கண்காணிப்பு  வசதிக்காக  தரை  நிலையங்களுக்குத்  தானாகவே  செய்திகளை  அனுப்பி  வைக்கும்  வழக்கம் கொண்டவை.

அந்தச்  செய்திகளின்படி  அந்த  போயிங்  விமானம் அது கடைசியாகக் காணப்பட்ட  இடத்திலிருந்து  நான்கு  மணி  நேரம்  பறந்து  பலநூறு  மைல்களைக்  கடந்து  சென்றிருக்க  வேண்டும்  என  வால் ஸ்ட்ரீட் ஜர்னல்  செய்தி   ஒன்று  கூறுகிறது.

விமானியோ  வேறு  யாருமோ,  ராடார்  கருவியில்  கண்காணிப்பில்  சிக்காதிருக்க விமானத்தின் transponder என்னும்  தகவல் செலுத்தியை  முடக்கிப்போட்டு  விமானத்தைத்  திசைதிருப்பி  கொண்டு  சென்றிருக்கலாம்  என  பயங்கரவாத-எதிர்ப்பு  அதிகாரிகள்  கருதுவதாகவும்  அவ்வேடு  கூறியுள்ளது.

மொத்தம்  ஐந்து மணி  நேரம்  அந்த  விமானம்  பறந்திருப்பதை  வைத்துப்  பார்க்கையில்  அது  இந்திய  பெருங்கடல்  பகுதியில்  பாகிஸ்தான்  எல்லையை  அல்லது  அராபிய கடல்  பகுதியைகூட  அடைந்திருக்கலாம்.