கோலாலும்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் ‘போமா’ ஒருவர், காணாமல்போன மலேசிய விமான நிறுவன விமானத்தைக் கண்டுபிடிக்க சில சடங்குகள் செய்தது பற்றி எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திடம் விளக்கம் கோரினார்.
“அனுமதி கொடுத்தது யார்? எம்ஏஎஸ்ஸா, சிவில் விமானப் போக்குவரத்துத் துறையா?”, என்றவர் வினவினார்.
அந்த ‘போமோ’-வால் மலேசியா அனைத்துலக அளவில் கிண்டலுக்கும் கேலிக்கும் இலக்காகியுள்ளது என்றாரவர்.
“அவர் 1மலேசியா வில்லை ஒன்றையும் அணிந்திருந்தார். அவர்தான் போமோ 1மலேசியா”, என்று அன்வார் சொல்ல மக்களவை சிரிப்பலையால் குலுங்கியது.
அரசாங்கம் இதற்கு என்ன பதில் சொல்ல போகிறது,இந்த விஞ்ஞான காலத்தில் இது நமக்கு தேவையா!சேட்டலைட் மூலம் தேடும் இந்த நவீன காலத்தில்,இளம் இளநி வைத்து!உலகம் நம்மை பார்த்து என்ன விளையாட்டு.யார் அனுமதி கொடுத்தது,அனுமதி கொடுத்தவர் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் காரணம் உலகம் நம் செயலை பார்த்து கிண்டல் செய்கிறது.
அட கூர்கெட்ட மண்டுங்களா, மேலிடத்தில் இருந்து அழைப்பு வராமலா இந்த கூத்து!. மலேசியன் ஏர்போர்ட் நிறுவனம் அனுமதி கொடுக்காமலா இந்த கூத்து!. ஒன்று மட்டும் நன்றாக தெரிகின்றது, அடுத்தவர் கஷ்டத்தில் இந்நாட்டு அரசியல்வாதிகளும், “அதிர்ச்சி” வைத்தியம் தரும் தகவல் சாதனங்களும் நன்றாகவே குளிர் காய்கின்றனர். காஜாங் தேர்தல் முடியும் வரை நன்றாகவே மக்கள் கவனத்தை திசைத் திருப்பி குளிர் காய்வார்கள். அதற்க்கு அப்புறும் பழைய குருடி கதவை திறடி என்ற கதைதான். காத்திருப்போம்.
ராடார் கண்டுப்பிடிக்காததை இந்த பொமொஹ் கோமாளி கண்டுப்பிடிபாரா . நல்ல காமெடி .
இந்த BOMOH வின் வரலாறை வெளிவிடுவான்களா இவனை வரவழைத்த அறிவாளிகள் ???
கோடைகாலமாக இருப்பதால், மக்களை இளநீர் குடிக்க சொல்லும் விளம்பரம் !
தேசிய முன் அணியின் அரசியல் பற்றி என்ன சொல்ல? எல்லா முக்கிய பதவிகள் எல்லாம் இந்த மர மண்டைகளுக்கு தான். நான் அதற்கு முக்கிய சாட்சி. பேசுவதற்கே எரிகிறது.
சிந்தித்து எழுதுங்கள்,கருத்தில் ஆணவம் அகம்பாவம் திமிர் இவை திரும்பி நம் மக்களை தாக்கும் மரவாதேய்.தெரேச கோக் கிண்டல் செய்தால்,பினாங்கில் மாணவனை அடித்து கழுத்தில் மணி கட்டி மாடுபோல் புள் தின்ன வைத்தனர்.செருப்பால் அடி வாங்கினான் கேரி தீவு தமிழ் மாணவன்,செரசில் 7 வயது தமிழ் மாணவன் துடபதால் அடிக்க பட்டான் [போனவாரம் ],செய்தது எல்லாம் மலாய் ஆசிரியர்.அவனை நாம் ஏன் சீண்ட வேணும்,அவர் நடிகரோ யாரோ ஆனால் அவர் பதிவு பெற்ற நாட்டு வைத்தியர்.நாராயண நாராயண.
கொடுமையிலும் கொடுமை… மக்கள் வேதனையில் இருக்கும் இச்சமயத்தில் இந்த கூத்து தேவைதானா? மந்திரத்தால் மாங்காய் விழுமா? மாயம் மந்திரம் வேண்டாம் என சொல்லவில்லை.. அது அவரவர் விருப்பம்.. ஆனால் அதை ஏன் பொது இடத்தில் கேலிகூத்தாய் செய்ய வேண்டும்? மூளை இருக்கும் இடத்தில் மிளகாய் இருக்கிறதோ சம்பந்தபட்டவர்களுக்கு? உலகமே இந்த தருணத்தில் நம்மை கவனித்து கொண்டிருக்கிறது.. இந்த நிலையில் அறிவுபூர்வமாய் எதையாவது செய்வார்கள் என்றால்… இப்போதும் ஏமாற்றமே.. மறைந்த வானூர்தியே… திரும்பி வந்துவிடு.. மனதில் சொல்லமுடியாத ஏக்கத்துடனும், கண்களில் கண்ணீருடனும் காத்திருக்கிறோம்.. உனக்காகவும், எங்களின் உடன் பிறவா சகோதர சகோதரிக்களுக்காகவும்..
ஒசாமா அனுமதி கொடுத்தாரோ!
போமோ வைத்து 1மலேய்சியா சுபர் சூபர்
என்னங்க அன்வார் !!! இந்த சூழ்நிலையில் ஆழ்ந்த துக்கதில் இருக்கும் MH 370 பயணிகளின் உறவினர்கள் மற்றும் உலகித்தினர் யாவரும் கொஞ்சம் கலகலப்பாக இருக்கட்டுமே என்று BN -னும் / UMNO -வும் BOMOH -க்களை அனுப்பி வைத்தால் அதிலும் குற்றம் கூறுகிறீரே !!!
லோஜிக்கா பாத்தா புரியாது,விமான பயணம் என்பது ஆபத்தானது இருந்தும் பயணிக்கிரோம்,சுனாமி நடந்துவிட்டதால் கடலுக்கு போவதில்லையா,பிரசவவலி கொடுமையானது 2ம் பிள்ளை பெற்கவில்லையா,வாழ்கையில் இதுவெல்லாம் சகஜமப்பா,தினமும் எத்தனையோ விபத்து,எத்தனையோ மரணங்கள்,எத்தனையோ மரண தண்டனைகள்,வெட்டு குத்து சம்பவங்கள் இயற்கையை நாம் வெல்ல முடியாது எவ்வளவோ தொழில் நுட்பம் வளா்ந்தாலும் ஏது பயன்,எல்லாம் இறை செயல் நாராயண சித்தம்.