கேஎல் அனைத்துலக விமான நிலையத்துக்கு ‘போமோ’-வை அழைத்து வந்தது பிஎன்னோ, அம்னோவோ, அல்லது எந்த ஒரு அரசாங்கத் துறையோ அல்ல என்று பிரதமர்துறை அமைச்சர் ஷாஹிடான் காசிம் விளக்கமளித்தார்.
இப்ராகிம் மாட் சின் என்று அடையாளம் காணப்பட்ட அந்த போமோ ஒரு “நடிகர்” என ஷஹிடான் கூறினார்.
“அவரைப் பார்க்கும்போது எனக்கு பழைய பி.ரம்லி படம்தான் நினைவுக்கு வருகிறது. உண்மையான போமோ சடங்குகளை அறையில் அமைதியான முறையில்தான் செய்வார்.
“வெட்ட வெளியில் செய்யப்படுகிறது என்றால் இது கோமாளித்தனம். போமோ வேலை அல்ல”, என அமைச்சர் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
மஸ்லான் இட்ரிசையும், மோனா பெண்டியும் மறந்து விட்டு பேசுகின்றீரே தலைவா! உம் கட்சி அரசியல்வாதிகள் போமோ இல்லை என்றால் மறந்தும் கூட வீட்டை விட்டு வெளியே கால் வைக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு கேணப் பயன்கள். தன்னையே நம்பாத குள்ள நரிகள். இது போதுமா? இல்ல, இன்னும் வேண்டுமா?
இந்த கப்ப விசயத்தில் யார் போமோவை வரவைத்தது ?
போமோவை பார்த்து உலகமே வியர்ந்து விட்டது.
ராஜா மந்த்ரவாதி,ராஜ பகையும் வேணாம் எவர்க்கும்.சிலர் எழுதுகின்றனர்,சிலர் அவரின் அனுபவ கல்வி மூலம் இலவசமா மனமுவந்து முடிந்த எதாவது செய்ய வருவதை அசிங்க படுத்துவது சரியன்று ,இருந்தாலும் ரகசிய வித்தையை,மறைவில் செய்திருக்கலாம் அதாவது சிலர் பொதுவில் இல்லை நம்பிக்கை என்பர் ஆனால் வருடம் தவறாமல் தாய்லாந்து கோயில்கு போய் வருவர்.நாராயண சித்தம்.
அப்படியென்றால் அத்துமீறி, ஒரு அனைத்துலக விமான நிலையத்தில், ,பொதுமக்களின் மத்தியில் , பாதுகாவலர்கள் முன்னிலையில் மந்திரவாதி அரங்கேற்றம் செய்துள்ளார் ? எங்கேபோனது உங்கள் கால்துறை ? அவன் போமோ என்று சொல்லி போம் வைத்துவிட்டால் ? அன்ன ஆகும் ?? இதற்க்கு அமைச்சர் கோமாளித்தனமான பதில் சொல்கிறார் ?
ஆனால் ஆரம்ப அறிவுப்புக்கள் யாரோ ஒரு பெரிய மனுஷன் அழைப்பின் பேரில் அவர் வரவழைக்கப்பட்டார் என்று சொல்லப்பட்டது! பெரிய மனுஷன் என்றால் அது அம்னோ தானே!
தோழா,நாம் கூட ஒரு தாடி,காவி போட்ட மனுஷன கூட்டி வருவதில்லையா,பத்துமலை காவடி பிரச்சனைக்கு மற்றும் விஷேசத்துக்கு.இந்த போமோ பதிவு பெற்ற நாட்டு வைதியா்.அவா் இஸ்லாம் முரைப்படி செய்கிராா்.நம்மை சயித்தான் பத்துமலை ஏறுது சொன்னதற்கு கோவபட்டோம்,இப்போ நாமே செய்தால் எப்படி.வாழ்க நாராயண சித்தம.
நாளைக்கே நாமும் அங்கே சென்று ஒரு கிடாயை வெட்டி சடங்கு செய்தால் வேடிக்கை பார்ப்பார்களா?
அந்தணர் என்பதற்கு பொருள் சான்றோா் என்பதால்,அறகடலாகவே விளங்கும் அந்த சான்றோரின் அடியோற்றி நடப்பவா்கேயன்றி,மற்றவா்களுக்குப் பிற துன்பக் கடல்களை கடப்பது என்பது எளிதான காரியமல்ல,குறல் 8,கடவுள் வாழ்த்து.
சான்றோர் என்பதின் இலக்கணத்தை அறிந்து அதன் வழி நிற்கும் அந்தணர் இன்று எவரோ? எங்கு உள்ளனரோ? என்று “kayee” விளக்கித் தெரிவிப்பீரா?. எல்லாம் வயிற்று பிழைப்புக்கு வழி தேடும் அந்தனராகவே உள்ளனரே தவிர, மெய்வழி வழி நடக்கும், வழிகாட்டும் அந்தணர் என்பது கானல் நீரே!.