எம்எச்370-இலிருந்து மின்னியல் துடிப்புகளைச் செயற்கைக்கோள்கள் செவிமடுத்துள்ளன

mh 370மலேசிய  விமான  நிறுவனத்தின்  விமானம்  ராடார்  திரையிலிருந்து  மறைந்த  பின்னரும்  அதனிடமிருந்து     மெல்லிய  மின்னியல்  துடிப்புகள்  வெளிப்பட்டதைத்  தொடர்புச்  செயற்கைக்கோள்கள்  செவிமடுத்துள்ளன.   விசாரணைக்குழுவுக்கு  அணுக்கமான  வட்டாரங்கள் இதைத் தெரிவித்தன.

விமானத்தின்  கோளாறுகளைச்  சரிசெய்யும்  கட்டமைப்புமுறை  முடுக்கி  விடப்பட்டிருந்தால்  மட்டுமே  அப்படிப்பட்ட  மின்னியல்  துடிப்புகள் வெளிவரும்.  ஒரு  மணி நேரத்துக்கு  ஒரு  தடவை  அம்மின்னியல் துடிப்புகள்  வெளிப்படும். ஆனால்,  இதை  மட்டும்  வைத்து  விமானம்  பறந்துகொண்டிருந்தது  அல்லது  தரை  இறங்கியது  என்று தீர்மானிக்க  முடியாது  என  அவ்வட்டாரங்கள்  கூறின.

விமானத்தைத்  தயாரித்த  போயிங்  நிறுவனமோ  அதன்  இயந்திரங்களை  உருவாக்கிய  ரோல்ஸ்  ரோய்ஸ்  நிறுவனமோ  இதைப்  பற்றிக்  கருத்துரைக்க  மறுத்து  விட்டன.