காஜாங்கில் பக்காத்தான்-எதிர்ப்பு அறிக்கைகள் குவிகின்றன

kajangகாஜாங்  இடைத் தேர்தல் சூடுபிடிக்கத்  தொடங்கியுள்ளது. தேர்தல்  பரப்புரைகள்  முமுமுரமாக  நடைபெற்றுவரும்  வேளையில்  பிஎன்ன்னுக்கு  ஆதரவும்  பக்காத்தானுக்கு  எதிர்ப்பும்  தெரிவிக்கும்  துண்டறிக்கைகள்  இப்போது  நகர  முழுவதும்  விநியோகம்  செய்யப்பட்டு  வருகின்றன.

ஒரு அம்னோ  நடவடிக்கை  அறையில்  ‘சிலாங்கூர்  ஹரி  இனி’  என்னும்  துண்டறிக்கை  காணப்பட்டது.

நேற்றிரவு  தாமான்  கோத்தா செராஸ்  ஃபாஸா 1-இல், 500-க்கு  மேற்பட்டோர்  கலந்துகொண்ட  ஒரு  கூட்டத்தில்  ‘சாத்தே  டவுன்’ என்ற துண்டறிக்கை  வழங்கப்பட்டது.

இரண்டு  துண்டறிக்கைகளிலும்  வெளியீட்டாளர், அச்சடித்தவர்  பெயர்  இல்லை.

சிலாங்கூர்  ஹரி  இனி  அன்வார்  இப்ராகிமை  மட்டமாக  தாக்கி  எழுதி  இருந்தது.  அவர்  சிலாங்கூர்  மந்திரி  புசார்  ஆக  “ஆசைப்பட்டார்”.  அதற்காகவே  இடைத்  தேர்தலுக்கு  ஏற்பாடு  செய்தார்  என  அது  கூறியது.

பாஸ்  இளைஞர்கள்  அன்வார்  மந்திரி  புசார்  ஆவதை  எதிர்ப்பதாகவும்  அது  தெரிவித்தது.

‘சாத்தே  டவுன்’ கடந்த  காலத்தில்  அன்வார்  கூறிய “பொய்களை” வெளிச்சம்  போட்டுக்  காண்பிப்பதாகக்  கூறியது.
முன்னாள்  காஜாங்  சட்டமன்ற  உறுப்பினர்   லீ  சின் செ-இன்  தோல்விகள்” என  ஒரு  பட்டியலையும்  வெளியிட்டிருந்தது.