‘பிறர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காதவர்’- பிஎன் எம்பியைச் சாடியது மசீச

mcaதாய்மொழிக்  கல்வி  தொடர்பில்  மற்றவர் “உணர்வுகளை  மதிக்காமல்” பேசும்  கிரிக் பிஎன்  எம்பி  ஹஸ்புல்லா  ஒஸ்மானுக்கு  மசீச  இளைஞர்  பகுதி  தலைமைச்  செயலாளர்  லியோங்  கிம்  சூன்  கடும்  கண்டனம்  தெரிவித்துக்  கொண்டார்.

ஐக்கிய  தேர்வுச்  சான்றிதழை அங்கீகரிக்க  வேண்டும்  என்று  சீனக்  கல்வியாளர்கள்  விடுத்துள்ள  கோரிக்கையை   ஏற்கக்கூடாது  என்று ஹஸ்புல்லா  அரசாங்கத்தைக்  கேட்டுக்கொண்டிருப்பதாக  தெரிகிறது.

“எங்கள்  தாய்மொழியைக்  கற்பிக்கவும்  கற்கவும்  அரசமைப்பு  வகை  செய்துள்ளது”, என   லியோங் ஓர்  அறிக்கையில்  கூறினார்.

அந்த  உரிமையைத்  தடுக்க  யாரும்  முயலக்கூடாது  என்றாரவர்.

தேசிய  ஒற்றுமை திருப்திகரமாக  இல்லை  என்றால் அதற்குக்   காரணம்  சீனர்கள்  அல்ல,  அரசாங்கக் கொள்கையே  காரணம்  என்று  லியோங்  கூறினார்.

“நியாயமாக   நடந்துகொள்ளாமல்  ஒவ்வொரு  இனத்தையும்  வெவ்வேறு  விதமாக  நடத்தினால் தேசிய  நல்லிணக்கம்  கெட்டுத்தான்  போகும்”,  என்றாரவர்.