வல்லினம் இலக்கிய குழுவினரின் ‘பறை’ காலாண்டிதழ், வல்லினம் பதிப்பகத்தின் வெளியீடான கே.பாலமுருகனின் மாற்று அரசியல் கவிதைகளின் தொகுப்பு ‘தூக்கிலிடப்பட்டவர்களின் நாக்குகள்’ மற்றும் கவிஞர் ம.நவீனின் தனித்துவமான கவிதைகளின் தொகுப்பு ‘வெறிநாய்களுடன் விளையாடுதல்’ , எதிர்வரும் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை மணி 6.30க்கு கிராண்ட் பசிபிக் விடுதியில் புத்தக சிறகுகளின் ‘கவிதை மாலையில்’ வெளீயீடு காண்கிறது.
எழுத்தாளர் அ.பாண்டியன், கவிஞர் பூங்குழலி வீரன் , கவிஞர் யோகி, தினகரன் மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் வெளியிடப்படவிருக்கும் கவிதை நூல்கள் குறித்து கலந்துரையாடுவர்.
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் இலக்கிய உரை யும் இடம்பெறும்.
கட்டணம் RM30.00 மட்டுமே. (இரண்டு கவிதை தொகுப்புகளும் உணவும் கொடுக்கப்படும்)
முக்கியமாக வருகையினை உறுதி செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்.
மேல்விபரங்களுக்கு:- தயாஜி 014-9005447
நாட்டுல எவ்ளவோ பிரசனை இருக்கு இது ரொம்போ முக்கியம்
முக்கியம்தான்.வல்லினத்தின் வெளியீடு ஆயிற்றே?
நம்மைச் சுற்றி எல்லாமே நடந்து கொண்டு தான் இருக்கும். அதற்காக இலக்கிய முயற்சிகளை முடக்கிவிட முடியாது. அல்லா என்று சொல்லை தடை செய்தார்களே அதற்காக அதனை இப்போது பயன் படுத்தினால் சும்மாவா இருப்பார்கள்?