எம்எச்370 காணாமல்போனதற்கு எத்தனை எத்தனை காரணங்களோ சொல்லப்படுகின்றன. லாஹாட் டத்து ஊடுருவல்காரர்கள், பக்காத்தான் ரக்யாட் ஆதரவாளர்கள், ஷியா பிரிவினர் போன்றோர்கூட அதற்குக் காரணமாக இருக்கலாம் என்று பெரித்தா ஹரியான் பத்தி எழுத்தாளர் ஒருவர் கூறுகிறார்.
“விமானம் காணமல்போனதற்கும் லஹாட் டத்து ஊடுருவலுக்கும் ஏன், அண்மைய நிகழ்வுகளுக்கும்கூட தொடர்பிருக்கலாம்”, என முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாக அந்தப் பத்தி எழுத்தாளர் முகம்மட் அன்வார் பாதோ ரோமன் எழுதியுள்ளார்.
மலேசிய விமான நிறுவனத்தின் 80 விழுக்காட்டு விமானிகள் எதிரணி ஆதரவாளர்கள் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தாராம்.
அவர்களில் ஒரு சிறிய எண்ணிக்கையினர் ஷியாக்களாம்.
அவர்களுக்கும்கூட எம்எச்370 காணாமல்போன விவகாரத்துடன் தொடர்பு இருக்கலாம் என்றாரவர்.
முன்பு மலேசிய கப்பலை கடத்திய சோமாலிய கடல் கொள்ளையர்களுக்கும், இந்த MH 370 விமான கடத்தலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றொரு தகவலையும் பெரித்தா ஹரியான் தனது தலையங்கத்தில் செய்தி வெளியிட்டு BN அரசாங்கத்தின் விசாரணைக்கு உதவலாம்.
ஒட்டு மொத்தமா விசாரணை செய்து வரும் அதிகாரிகளுக்கே அந்த சிவபெருமான் சத்தியமாக என்ன நடந்தது என்று இதுவரை தெரியவில்லை. அப்புறம் அம்னோவின் பத்திரிக்கையாகச் செயல்படும் “Berita Harian” ஏன் ஆதாரமில்லாமல் ஆரூடங்களைக் கூற வேண்டும். எல்லாம் காஜாங் தேர்தல் காரணமாகத்தோனோ என்றே எண்ணத் தோன்றுகின்றது. நடத்துங்கள் நாடகத்தை அந்த 239 உயிர்கள் வந்து உங்ககளை விரட்டி, விரட்டி ஓட்டும் வரை.
ஆதாரம் இல்லை என்று சொல்ல முடியாது. போன தேர்தலின் போது லஹாட் டத்து பிரச்சனை வைத்து பாரிசான் மக்களைத் திசைத் திருப்பியது. இந்த முறை அதை விட மோசம். காஜாங் தேர்தலில் பாரிசான் வெற்றி பெற வேண்டும். அன்வார் ஜெயில் தண்டனை. கர்பால் சிங் ஜெயில் தண்டனை. விலைவாசி ஏற்றம். இதனை எல்லாம் திசைத் திருப்ப இந்தக் கடத்தல் நாடகம். தேர்தலுக்கு ஒரு நாளைக்கு முன்னர் மாஸ் விமானக் கடத்தல் ஒரு முடிவுக்கு வரும்!
காஜாங் உண்டி பி கே ஆர் உண்டி.
MH 370 விமானம் காணாமல் போனதற்கு முக்கியமான ஐந்து ‘உள்ளூர் விவகாரங்கள்’ :
1. 10 மில்லியன் கேட்டு கிடைக்காததால் ஆத்திரத்தில் இருக்கும்
BN -னின் கூட்டணி கட்சி.
2. அமைச்சர் பதவி கேட்டு எந்த பதிலும் கிடைக்காததால் ஏமாற்றம்
அடைத்திருக்கும் BN -னின் கூட்டணி கட்சி.
3. பல ஆண்டுகளாக BN -னுக்கு ஆதரவு கொடுத்தும் இன்றுவரை
BN கூட்டணியில் சேர்த்து கொள்ளாததால் கோபத்தில் இருக்கும் கட்சிகள்.
4. உண்மையான BUMUPUTRA -வின் சலுகைகளை UMNOPURTA -க்கள் மட்டும் அனுபவித்து கொண்டிருகிறார்களே என்று பொறாமை கொண்டவர்கள்.
5.’ PERKASA ‘ போன்ற இன துவேசத்தை தூண்டும் தரப்பினர் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தி அடைந்திருக்கும் NGO -க்கள்.
இதையெல்லாம் மறைத்து விட்டு ‘பெரித்தா ஹரியான்’ எதிர் கட்சிகள் மீது பழி போடுவதை பார்த்தால், சந்தேகம்தான் வருகிறது.
உள்ளூர் விவகாரம் என்று எதைச் சொல்லுறிங்க?அன்வாரையா?அவர்களுக்கு தெரிந்த ஒரே உள்ளூர் விவகாரம் இதானே.