நாடு முழுக்க காற்றின் தரம் மேம்பட்டது

apiகடந்த  சில  நாள்களாக  ஆரோக்கியத்துக்குக்  கேடு  செய்யும்  வகையில் இருந்த  காற்றின்  தரம்  இப்போது  மேம்பட்டுள்ளது.

இன்று  காலை  மணி  ஆறுக்கு  மேற்கொண்ட  ஆய்வின்படி  நாட்டின்  எந்தப்  பகுதியிலும்  காற்றின்  தரம்  ‘ஆரோக்கியத்துக்குக்  கேடு  செய்யும்”  அளவில்  இல்லை  என  சுற்றுச்சூழல்  துறை (டிஓஇ)  கூறியது.

டிஓஇ  வெளியிட்ட  காற்றுத்  தூய்மைக்கேட்டுக்  குறியீடு (ஏபிஐ)  காற்றின்  தரம்  11  பகுதிகளில்  மிதமான  நிலையில்  இருப்பதையும்  41  பகுதிகளில் நல்ல  நிலையில்  இருப்பதையும்  காண்பித்தது.