அன்வார்: பிகேஆரை எம்எச்370 உடன் தொடர்புப்படுத்துவது ஏன்?

anwarகாணாமல்போன  மலேசிய  விமான  நிறுவனத்தின்  எம்எச்370  விமானத்தையும், விமானி  பிகேஆர்  உறுப்பினர்  என்பதையும்  தொடர்புப்படுத்தி  செய்திகள்  வெளிவருவது  குறித்து  பிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்  கேள்வி  எழுப்பியுள்ளார்.

குதப்புணர்ச்சி  வழக்கில்  அன்வார்  குற்றவாளி  என்று  முறையீட்டு  நீதிமன்றம்  அளித்த  தீர்ப்பைக்  கேட்டு  விமானி  கேப்டன்  ஸஹாரி  அஹமட்  ஷா  ஆத்திரமடைந்தார்  என்று  வெளிநாட்டு  நாளேடு  செய்தி  வெளியிட்டிருந்ததை  அவர்  சாடினார்.

“எனக்கு  ஐந்தாண்டுச்  சிறைத்தண்டனை  என்றதும்  அந்த   கேப்டன்  வருத்தமுற்றாராம்,  வெளிநாட்டு  ஊடகங்கள்  கூறியுள்ளன.

“அவர்  வருத்தமுற்றார்  என்றால்  அவரை  விடவும்  வருத்தமடைந்தவர்கள்  இருக்கிறார்கள்”,  என்றாவர்,

விமானம்  காணாமல்போன  விவகாரத்தில்  அரசாங்கம்  அனைத்துலக  ஊடகங்களிடம்  நடந்துகொள்ளும்  விதத்தை  அன்வார்  குறைகூறினார்.

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கும்  அவரின்  அமைச்சர்களும் முன்னுக்குப்பின் முரணான  அறிக்கைகளை  வெளியிடுவதாக  அவர்  சொன்னார். மார்ச்  15ஆம்  நாள்  செய்தியாளர்  கூட்டத்தில்  நஜிப்  கேள்விகளை  அனுமதிக்காததையும்  அவர் கண்டித்தார்.

அனைத்துல  ஊடகங்களிடம்  எப்படி  நடந்துகொள்வது  என்பது  நஜிப்புக்குத்  தெரியவில்லை  என  அன்வார்  கூறினார்.
“அவர்கள்  நியு  யோர்க்  டைம்ஸ்,  ஸின்ஹுவா, இந்துஸ்தான்  டைம்ஸ்,  ஜாகார்த்தா  போஸ்ட்   போன்றவற்றைச்  சேர்ந்தவர்கள்.  அவர்களைச்  சந்திக்கும்  துணிச்சல் அவருக்கு (நஜிப்) இல்லை”,  என்றாரவர்.